Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 23, 2015

avathani Media Network

வன்முறைக் கலாசாரத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்-தாருல் அதர் அத்தஅவிய்யா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


கடந்த 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் பேட்டியிட்டு சுமார் 127 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற பிரவேசத்தை இழந்த முன்னாள் பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று (21) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற நியமனம் வழங்கப்பட்ட செய்தி வெளியானதிலிருந்து ஆதரவாளர்களில் அதிகமானோர் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஊர்வலமாகச் சென்றனர்.
அதேவேளை, அவர்களில் சிலர் தேர்தல் காலத்தின் போது ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்கள், வேட்பாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் அமைவிடங்கள் மீதும் பட்டாசுகளை கொளுத்தி எறிந்துள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தேநீர் சாலையும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலையடைவதுடன் இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்ளுக்கு எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் மலர்ந்த நல்லாட்சியில் இவ்வாறான சம்பவங்கள் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதுடன் சட்டத்தை மீறும் செயலுமாகும்.
நாட்டின் முன்மாதிரிமிக்க, அதிக உலமாக்களைக் கொண்டுள்ள ஊர் எனும் பெயருக்குரிய காத்தான்குடியில், தேர்தலின் பின்னர் நாட்டின் எப்பாகத்திலும் நடைபெறாத இம் மோசமான நிகழ்வு உண்மையில் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வகையில் இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் நடுநிலைமையோடு சிந்திக்கின்ற சமூக, சமய மற்றும் அரசியல் அமைப்புக்கள் இத்தாக்குதல்கள் தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவிக்குமாறும் வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :