Featured Home (TOP)

Recent Comments

Sunday, August 23, 2015

avathani Media Network

கட்சி கோரினால் பதவியை இராஜினாமா செய்யத் தயார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னூ­டாக எனக்கு வழங்­கப்­பட்­டுள்ள தேசி­யப்­பட்­டியல் மூலமான பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வ­மானது ஒரு குறு­கிய காலத்­துக்­கா­னது எனத் தெரி­விக்கும் மு.கா.வின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் கட்­சித்­த­லைமை கோரு­கின்ற பட்­சத்தில் அப்­ப­த­வியை இரா­ஜி­னாமாச் செய்­வ­தற்கும் தயா­ரா­க­வுள்­ள­தா­கவும் கூறினார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குறித்து எழுந்­துள்ள சர்ச்சை தொடர்­பாக அவர் கருத்­துத்­தெ­ரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறு­கையில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்கு தேசி­யப்­பட்­டி­ய­லூ­டாக இரண்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­துள்­ளது. இந்­நி­லையில் குறு­கிய காலப்­ப­கு­திக்குள் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து அப்­ப­த­விக்கு யாரைத்­தேர்ந்­தெ­டுப்­பது என்­பது கட்­சிக்கு சிக்கல் நிலையை தோற்­று­வித்­தது.
காரணம் தேர்தல் செய­லகம் தேசி­யப்­பட்­டியல் விப­ரங்­களை அவ­ச­ர­மாக சமர்ப்­பிக்­கு­மாறு கோரி­யி­ருந்­த­மை­யாகும். இந்­நி­லையில் கட்­சித்­த­லைமை நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து அப்­ப­த­விக்கு ஏற்ற தகு­தி­யான ஒரு­வரை தேர்ந்­தெ­டுக்கும் வரை தலை­மைக்கு மிகவும் விசு­வா­ச­மான இரு­வரை தெரிவு செய்து தேசி­யப்­பட்­டி­ய­லுக்கு கட்­சித்­த­லை­மை­யி­னூ­டாக சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ்­வி­ரு­வர்­களுள் நானும் ஒருவர்.
முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி தலைமை இதற்கு முன்னர் நடந்த தேர்­தல்­க­ளிலும் எனது பெயரை உள்­ள­டக்­கி­யி­ருந்­த­மையை இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறேன். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யி­னூ­டாக எனக்கு தேசி­யப்­பட்­டியல் எம்.பி.பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.
இப்பதவியானது ஒரு குறுகிய காலத்துக்கானது. கட்சிக்கு விசுவாசமான மற்றும் தகுதியானவர்கள் அப்பதவிக்கு இனங்காணப்படுமிடத்து எனக்கு வழங்கப்பட்டுள்ள எம்.பி. பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளேன்.
Source - virakesary

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :