Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 6, 2015

avathani Media Network

காத்தான்குடியில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட ஊர்வலமும் விழிப்புணர்வு கூட்டமும்

(எம் எச்.எம் அன்வர்)

'தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் 2015' எனும் தலைப்பில் நேற்று காத்தான்குடி பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப்பிரிவினால் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் ஊர்வலமும் விழிப்புணர்வுக் கூட்டமும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றது

காத்தான்குடி பிரதச செயலகத்திலிருந்து பிரதான வீதியூடாக சென்ற இவ்வூர்வலம் குட்வின் சந்திவரை சென்று திரும்பியதுடன் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றம் இடம்பெற்றது

மேற்படி ஊர்வலத்தில் காத்ததான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் ,உதவி பிரதேச செயலாளர் ஏ சி அப்கர், ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம் எஸ் எம்.ஜாபீர் பொதுச்சுகாதார வைத்திய அதிகார்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள்  பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்












avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :