மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காத்தான்குடி யெங்கும் ஹஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஊர்வலம் சென்று மக்கள் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
அதே நேரம் சில ஆதரவாளர்கள் அடிதடியென அடாவடித்தனத்திலும் இறங்கியுள்ளனர். இதன் மூலம் பல சகோதரர்கள் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இப்போது காத்தான்குடியெங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் பள்ளிவாயலுக்குள் தங்களது கைவரிசையைக் காட்டத் தவறவில்லை. இங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த சில சகோதரர்களும் அவர்களினால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்
யாராக இருந்தாலும் மற்றவர்களும் நமது சகோதரர்களே பொறுமையோடு வெற்றியைக் கொண்டாடுங்கள். அல்லாஹ் நம்மனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.




