Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதால் பொது பல சேனா என்னை கொல்ல திட்டமிட்டுள்ளது - வட்­ட­ரக்க விஜித தேரர்

முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக நான் குரல் கொடுப்­பதால் பொது­ப­ல­சேனா என்னைக் கொலை செய்­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது. இரத்தம் சிந்­து­வது எனக்குப் புதி­ய­தொன்­றல்ல. பொது­ப­ல­சே­னாவின் இன­வா­தத்­திற்கு எதி­ராக எனது இறுதி மூச்­சு­வரை போரா­டுவேன் என நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்தார்.

நாட்டில் இன ஐக்­கி­யத்தை உரு­வாக்­கும்­வரை தான் ஓயப்­போ­வ­தில்லை எனவும் அவர் சூளு­ரைத்தார்.

வட்­ட­ரக்க விஜித தேரர் வியாழன் இரவு கொழும்பு வாழைத்­தோட்டம் அக்பார் ஒழுங்­கையில் தேர்தல் பிர­சாரக் கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்­த­போது தேரர்கள் சில­ரினால் பல­வந்­த­மாக இழுத்துச் செல்­லப்­பட்டு அரு­கி­லுள்ள பன்­ச­லைக்குள் அடைத்து வைக்­கப்­பட்டு தாக்­கப்­பட்டார்.

பலத்த காயங்­க­ளுக்­குள்­ளான அவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் 72 ஆம் இலக்க வார்ட்டில் அனு­ம­திக்­கப்­ப­ட்டு ஞாயிற்­றுக்­கி­ழமை வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தும் தனது சொந்த விருப்­பத்தின் பேரில் வெளி­யே­றினார்.

இச் சம்­பவம் தொடர்பில் ‘விடி­வெள்ளி” வட்­ட­ரக்க விஜித தேரரைத் தொடர்பு கொண்­ட­போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார்.
வாழைத்­தோட்­டத்தில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தியில் நான் தேர்தல் பிர­சா­ரத்­தில ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது பொது­ப­ல­சேனா அமைப்பின் 8 குரு­மார்கள் வந்து என்னை பலாத்­கா­ர­மாக இழுத்துச் சென்று பக்­கத்­தி­லுள்ள பன்­ச­லைக்குள் அடைத்­து­வைத்து தாக்­கி­னார்கள். முஸ்­லிம்­க­ளையும் என்­னையும் சம்­பந்­தப்­ப­டுத்தி தூசன வார்த்­தை­களால் ஏசி­னார்கள்.

இரவு 9 மணி­ய­ள­வில வாழைத்­தோட்ட பொலிஸார் வந்து என்­னையும் நஸீம் ஹாஜி­யா­ரையும் மௌலா­னா­வையும் அழைத்­துச சென்­றார்கள். நான் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டேன். மற்­றைய இரு­வரும் வாக்கு மூலம்­பெற்றுக் கொண்ட பின் விடு­விக்­கப்­பட்­டனர்.

புறக்­கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி வைத்­தி­ய­சா­லைக்கு வந்து என்­னிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டார். நான் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுப்­பதை வேறு எவரும் எதிர்க்­க­வில்லை. பொது­ப­ல­சே­னாவே எதிர்க்­கி­றது.

நாட்டில் இன­வா­தத்தைத் தோற்­க­டிக்க வேண்டும். பொது­ப­ல­சே­னாவை இல்­லாமற் செய்ய வேண்டும். இந்தப் பணிக்­காக நான் இரத்தம் சிந்தி போராட்­டங்­களை நடத்­துவேன். பொது பல சேனா தேரர்­களின் நட­வ­டிக்­கைகள் மிகவும் மோச­மாக இருக்­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் அவர்கள் முஸ்­லிம்­களை ஆத­ரிப்­ப­வர்­க­ளையும் எதிர்க்­கி­றார்கள்.

என்னைத் தாக்­கு­வ­தற்கு இரண்டு தினங்­க­ளுக்கு முன்பு பொது­ப­ல­சே­னா­வினால் எனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­கவும் அதனால் பாது­காப்பு வழங்­கு­மாறும் தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் நேரில் சென்று கோரிக்கை விடுத்தேன்.

எனது கோரிக்­கையை பாது­காப்பு அமைச்­சுக்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் அவர்­கள்தான் பாது­காப்பு வழங்க வேண்­டு­மெ­னவும் கூறினார்.

நான் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­திலும் தாக்­கப்­பட்டேன். இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தாக்­கப்­பட்டேன். மஹிந்த அர­சாங்கம் பொது­ப­ல­சே­னா­வுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை இந்த அர­சாங்­கமும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

நான் எதிர்­வரும் தேர்­தலில் நவ சம­ச­மாஜக் கட்­சியில் போட்­டி­யிடும் ஒரு வேட்­பாளன். மரண பயத்­து­ட­னேயே தேர்தல் பிர­சாரம் செய்­கிறேன், வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறேன்.

வேட்பு மனுவைக் கூட கச்­சே­ரிக்கு சென்று கைய­ளிக்­க­வில்லை. வேறு ஒரு இடத்தில் வைத்து கையொப்­ப­மிட்டே அனுப்பி வைத்தேன்.

என்னால் பகி­ரங்­க­மாக எங்கும் நட­மாட முடி­யா­துள்­ளது. இது ஜனநாயக நாடு. எனக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இது எனது உரிமை. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வெளியே செல்ல முடியாத அச்ச நிலையில் நான் இருக்கிறேன்.

முஸ்லிம்களின் வாக்குகளால் ஒரு பௌத்த மதகுரு பாராளுமன்றம் செல்கிறார் என்றால் அது நானாகத்தான் இருக்கும் என்றார்.


avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :