Featured Home (TOP)

Recent Comments

Tuesday, August 11, 2015

avathani Media Network

புதிய காத்தான்குடி பைசால் வீதி சந்தியில் இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டம்




9ஊடகப்பிரிவு)

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி, 2ம் குறுக்கு, பைசால் வீதிச் சந்தியில் நேற்று இடம்பெற்றது. 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய செயற்குழு உறுப்பினர் SL.மக்பூல் அவர்களின் தலைமையில் இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி), தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழுலுல் ஹக், முன்னாள் நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளர் சிப்லி பாறூக், அதன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA, சகோ, முஜீப் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.
முன்னாள் காத்தான்குடி பிரதேச சபை தலைவர் அல்ஹாஜ் SMM.காசீம், செயற்குழு உறுப்பினர் சகோ, ஹன்ஸ், சகோ, ஹனீபா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட இப்பிரச்சாரக் கூட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டதுடன் வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. 
























avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :