நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டேன்.
நல்லாட்சியினை வழுப்படுத்தும் முகமாக முடிந்தளவு எவ்வித பிரச்சினைகளுமின்றி அமைதியானதும் ஜனநாயக ரீதியிலுமான தேர்தலை எமது பிரதேசத்தில் நடாத்தி முடிக்க என்னாலான அனைத்து பங்களிப்பினையும் செய்திருந்தேன்.
மிகசொற்பலவிலான வாக்கு வித்தியாசத்தில் எமது கட்சி ஆசனத்தை இழந்தபோதும் என்மீதும் எனது மக்கள் மீதும் கொண்ட நல்லபிப்பிராயமும் நம்பிக்கையும் காரணமாக தேசியப்பட்டியலொன்றை எனக்களிக்க எமது ஜனாதிபதி முன்வந்தமையினை இற்று எனது மக்கள் சார்பாக முதலில் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேர்தல் என்பது ஒரு போட்டியானதே. வெற்றியும் தோழ்வியும் இறைவன் வழங்கும் அம்சமாகும். பதவி என்பது அல்லாஹ் தான் நாடுபவர்கலுக்கே வழங்குவான் என்பதனை எனக்கான தேசியப்பட்டியல் ஆசனம் உறுதிப்படுத்துகின்றது.
அடுத்தவரை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது நான் வெல்ல வேண்டும் என்றே எனது அரசியல் பயணம் இருந்து வந்துள்ளது. இன்று எனக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனமானது எனது பிரதேச மக்களுக்களிக்கப்பட்ட கெளரவமாகவே கருதுகின்றேன்.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சொற்ப வாக்குகளால் இழந்த எனது மக்களுக்கு இது ஒரு ஆறுதலாக கருதுகின்றேன். ஆனால் என்மீது சேரு பூசும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சினைகளையிட்டு கவலையடைகின்றேன். குறித்த பிரச்சினைகளோடு தொடர்புடையவர்களுக்கு உறிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நீதி துறையினரிடம் வேண்டுகோல் விடுத்துள்ளதுடன், எனது பூரன ஆதரவும் ஒத்தாசையும் இவ்விடயத்தில் கிடைக்கும் என்பதனை உறுதிப்படுத்துகின்றேன்.
எனது அரசியல் மீது காழ்ப்புணர்வு கொண்டு எனது அரசியலை அழித்தொழிக்க எடுக்கும் முயற்சிகள் திரைமறைவில் எனது மண்ணுக்கும் மாவட்டத்துக்கும் செய்யும் துரோகத்தனமாகவே அமையும் என கருதுகின்றேன்.
எனது மண்ணை அரசியல் அனாதையாக ஆக்க எடுக்கும் முயற்சிகளுக்கு எனது இறைவனும் மக்களும் சாட்சியாளராக இருக்கிறார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே மாற்றரசியல் செய்யும் சகோதரர்கள் மக்களையும் எமது மண்ணையும் பிழையானவர்களாக தேசியத்தில் காட்டாமல் எமது இலட்சிய வாத அரசியல் பயணத்தில் பங்கெடுத்து எமது பிரதேச அபிவிருத்திக்கும், நல்லாட்சிக்கும் கைகோர்க்க அழைப்பு விடுக்கின்றேன்.
கடந்த காலங்களில் என்மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி மெளனித்துப்போன உங்கள் பழிவாங்கும் அரசியலை விட்டும் வெளியில் வந்து நியாயபூர்வமானதும் யாதார்த்தபூர்வமானதுமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள மனந்திறந்து அழைப்பு விடுக்கின்றேன்.
எனக்கெதிராக வாக்களித்தவர்கள் எனது எதிராளிகள் அல்ல. அவர்களும் எனது அபிவிருத்தி, சேவைகளுக்கு உரித்துடையவர்களே. பிழைத்துப்போன உங்கள் கொள்கைவாத அரசியலினை தூக்கி நிறுத்திக்கொள்ள வேண்டி எனது மக்களையும் என்னையும் பிரித்தாளும் விதிகளுக்குள் சிக்க வைக்கும் அற்ப முயற்சிகளை இறைவனிடத்தில் பாரம் சுமத்துகின்றேன்.
எனவே பகைமைகளை மறந்து மக்களை நல்லாட்சியின் பால் வழிநடாத்த மாற்று அரசியல் கொள்கையாளர்களை அழைப்பு விடுப்பதுடன் பிழையான வன்முறைகளினால் பாதிப்படைந்த அனைத்து சகோதரர்களும் உரிய நிவாரணம் பெறுவதுடன், பூரண சுகம்பெற பிரார்த்திக்கின்றேன்
