Featured Home (TOP)

Recent Comments

Monday, August 24, 2015

avathani Media Network

தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு!

நடை­பெற்று முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது சொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்தார்.​
பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்கல் செய்த பின்னர், சொத்து விப­ரங்­களை வெளியி­டு­மாறு சகல வேட்­பா­ளர்­க­ளுக்கும் தேர்தல் செய­ல­கத்­தினால் அறி­வு­றுத்­தப்­பட்­டது.
சொத்து விப­ரங்­களை வெளியி­டாத எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் வேட்­பாளர் அடை­யாள அட்டை வழங்­கப்­பட மாட்­டாது என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருந்தார்.
வேட்­பாளர் அட்டை இல்­லாத வேட்­பா­ளர்கள் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­படும் எந்­த­வொரு சலு­கை­களையும் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும், குறைந்த பட்சம் வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்கும் செல்ல அனு­மதி வழங்­கப்­பட மாட்­டா­தெ­னவும் அவர் தெரி­வித்­தி­ருந்­த­தோடு, தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் சொத்து விப­ரங்­களை வெளியிட வேண்­டு­மென தேர்­தல்கள் திணைக்­க­ளத்தால் ஏற்­க­னவே அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் உட்­பட பல வேட்­பா­ளர்கள் இன்னும் சொத்து விப­ரங்­களை வெளியி­ட­வில்லை.
எனினும் இத் தேர்­தலில் 6151 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்­டி­ருந்­த­போ­திலும் சுமார் 2000 இற்கும் அதி­க­மான வேட்­பா­ளர்கள் முழு­மை­யாக சொத்து விப­ரங்­களை வெளியிடவில்லையென தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :