அஸ்ஸலாமு அலைக்கும் ,
தலைவர்,
மு காங்கிரஸ்.
நடந்து முடிந்த பா ம தேர்தலின் பின்னனியி்ல் இவைகளை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதுகிறேன்.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை , ஐ தே க சிங்கள மக்களின் ஆதரவுடனும் , குறிப்பாக தெஹியத்தகண்டி , பதியதளாவ பிரதேச சிங்கள மக்களுடனான உங்களுடைய தனிப்பட்ட செல்வாக்கின் ஊடாகவும் , காசு பணத்தின் ஊடாகவும் , அஷ்ரபின் எழுச்சிப்பாட்டுக்கள் ஊடாகவும் மிக முக்கியமாக மஹிந்த எதிர் வாதத்தக்கூடாகவும் , உங்களது தயா கமகே மீதான அதிருப்தியின் கூட்டு மொ்தத வடிவமே இந்த வெற்றியாகும் .
மட்டக்களப்பில் ,
எந்த ஒரு பிரதேசமும் ஒரு பிரதிநிதுத்துவத்தை வழங்கக்கூடிய வாக்குப்பலம் இல்லாத சூழலில் ,
மூன்று முஸ்லிம் பிரதேசங்களிளும் உங்களது வியூக திறமையின் அடிப்படையில் நான்கு புதியவர்களை ஏதோ ஓர் அடிப்படையி்ல் களமிறக்கி , கட்சிக்குரிய கட்சியின் பேரி்ல் ஆசணத்தை வென்றுள்ளீர்கள்.
இதி்ல் சிங்கள தமிழ் மக்களின் எந்த பங்களிப்பும் இன்றி போட்டியில் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டோம் . இதற்கு பல காரணங்களை கூறினாலும் , மாவட்த்தில் கா குடியி்ல் கட்சியின் செல்வாக்கு என்ன என்பதை பல தேர்தல்களில் கண்கூடாக கண்டுள்ளீீர்கள் .
இருந்தும் எப்போதும் போன்றே யாரை வேட்பாளர்களாக களமிறக்கினாலும் கட்சிக்கு கனிசமான வாக்குகளை வளங்குகின்ற ஏறாவூர் , கல்குடா முஸ்லிம்கள் வலமை போன்று தங்களது பங்களிப்பை வளங்கினர் ,
குறிப்பாக ஏறாவூர் மக்கள் வழமையை விட மௌலானா என்பதால் சற்று கூடுதலாக பங்களித்தனர். திருமலை மாவட்டத்தி்ல் , கனிசமான வாக்குகளுடனும் , பிரதியமைச்சர் என்ற அந்தஸ்துடனும் களமிறக்கப்பட்ட எமது வேட்பாளர் , தோல்வி அடைந்ததற்கு அவரின் தகுதியீனத்தையே காட்டுவதுடன் , ந தே மு சார்பாக மூதூரை மையப்படு்த்தி போட்டியிட்ட வேட்பாளருடனான பரஷ்பர ஒத்துழைப்பின்மையும் மிக முக்கிய காரணமாகும் .
வன்னியில் ,
மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு வேட்பாளரை எமது கட்சி இனம்கண்டு களமிறக்காத தலமைத்துவ குறைபாடாகவே தோல்வி நோக்கப்படுகிறது.
கண்டியில் ,
தே தலமைத்துவத்தின் நம்பிக்கையும் , அனுபவமும் , தலமையின் சிங்கள தமி்ழ் மக்களுடனான நல்லுறவும் . சற்று பண பலமும் வெற்றிக்கு வழிகோளியது .
ஏனைய மாவட்டங்களில் ,
கட்சியின் மிக மிக முக்கிய பிரமுகர்கள் தங்களது மாவட்ட ஊர்களிலேயே நின்று தலைவரிடம் மதிப்பென் எடுத்தார்களே ஒழிய , கட்சிரீதியாக பலவீணமான மாவட்டங்கள் என அடையாலம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் வேலை செய்வதற்கு , கட்சியின் மூலம் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள், அரசியல் பதவிகள் பெற்ற கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபடவில்லை என்பதன் விளைவே தோல்விக்கு காரணம்.
அடுத்து மட்டக்களப்பில் ந தே முன்னனியும், கட்சியும் என்ற கூட்டின் மூலம் எவ்வாறு எமது மரியாதை காக்கப்பட்டது என்பதில் ந தே முன்னனியின் பங்களிப்பினை மறக்கவோ , மறுக்கவோ முடியாது என்பது உண்மை. ஏனெனில், இவர்களின் ஒழுங்கமைப்பு தேர்தல் பிரச்சாரம் , சொந்த அங்கத்தவர்களை தேர்தல் பிரச்சார வேலைகளில், வாக்களிப்பு , கணெக்கெடுப்பு நிலையங்களில் பயன்படுத்தியது, தங்களுக்கிடையில் நிதி வசதிகளை அங்கத்தவர்கள் , தொண்டர்கள் , அபிமானிகள் மூலம் ஏற்படுத்திக்கொண்டல் , ஊரில் உள்ள சகல தஃவா , தௌஹீத் அமைப்புக்களையும் ஒர்முகப்படுத்தல் , பெருமளவான பெண்கள் , தாய்மார்களை தமது அமைப்பின் உறுப்பினர்களூடாக தேர்தல் செயற்பாடுகளில் பங்கேற்பு செய்வித்ததன் ஊடாக பெண்களின் வாக்களிப்பு வீதத்தினை உயர்த்தியது , வாக்காளர்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையை வளர்த்தல் , நல்லாட்சியின் தத்துவத்தை , ஆட்சி அமைப்பை, நம்பிக்கை தன்மையை , உண்மைத்தன்மையை மக்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்தியமை , வேட்பாளர்களுக்கிடையில் நல்லதோர் சுமுக உறவினை பேணியது , இளைஞர் அணியை ஒருமுகப்படுத்தல் , கட்சியுடன் அதிருப்தியில் இருந்த பல சகோதரர்களை இனங்கண்டு அவர்களை அரவணைத்து பிரச்சாரங்களில் பயன்படுத்தியது போன்ற பல பல காரணங்களை கூறலாம் .
இவ்வாரான பல காரணங்களினால் கா குடியில் பல ஆண்டுகளுக்கு பின் கட்சிக்கு சுமார் 15000 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன் , கட்சியின் எதிரி, மார்க்க விரோதி, பொய்யன், ஊழல் பேர்வழி, காடயர்களின் தந்தை மண்ணின் மஹிந்த ஹிஸ்புல்லாஹ் தோற்கடிக்கப்பட்டான் ,
அல்ஹம்துலில்லாஹ்.
மட்டில் ,
கா குடியில் 15000
ஏறாவூர் 13500
கல்குடா 9500
என 38000ம் மொத்த வாக்கும் , அதில் 15000 ம் கா குடி மக்கள் அளித்தும் கா குடிக்கு பிரதிநிதித்துவம் அதாவது ந தே முன்னனிக்கு இல்லாமல் போனதற்கு பல காரணங்களை கூறலாம் ,
இரு வேட்பாளர்கள் கா குடியில் ரேஸ் ஓடியது ,
இரு மனாப்பையையும் ஊர் வேட்பார்களுக்கு போட்டு மீதி மனாப்பையை மற்ற ஊர் வேட்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியது ,
கட்சி தலைவரினதோ . ஏனைய முக்கியஸ்தர்களினதோ விஷடே முக்கியத்துவம் பிரச்சாரங்களில் வழங்கப்படாமை,
கட்சியினால் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது போல் நிதிப்பங்களிப்பின்மை,
ஊர்வாதம் பேசப்படாமை,
முதலமைச்சரின் ஒருபக்கச்சார்பு ஹலெி டூர்
பிரச்சாரம் ,
நூறுவீதம் சட்டத்துக்கு மதிப்பளித்து ஈடுபட்டல் ,
வழமையான தேர்தல் பம்மாத்துக்கள் இன்மை,
ஒப்பந்தங்கள் மூலம் மா்ர்க்க வரையருக்குள் கட்டுப்பட்டல்,
கட்சி காரர்கள் இல்லை என்ற விஷமப் பிரச்சாரம் ,
இறுதிக் கூட்டத்தில் மௌலானாவுக்கு முக்கியத்துவம் ,
இன்னும் இது போன்ற பல காரணிகளால் இவர்களின் தெரிவு தடைப்பட்டாலும் , கட்சிக்குறிய பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த இடத்தில்தான் தேசிய பட்டியல் விவகாரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ,
அஷரப் அவர்களுடைய காலம் தொட்டு இறுதி வரை வழங்கப்பட்ட தே பட்டியல் உறுப்பினர்களில் உங்களைத்தவிர வேறு எந்த நபர்களாளேயோ சமூகத்துக்கோ , நாட்டுக்கோ ஆகக் குறைந்தது அவர்களின் தனி்ப்பட்ட வாழ்க்கையிலோ சாதி்த்தது பூச்சியமே . உங்களை , சம்பிகவை, ரவியை, சுமந்திரனை, ஹர்ஷாவை, எரான் போன்றவர்களை தே பட்டியல் மூலம் கட்சிகள் அறிமுகப்படுத்தி இருக்கா விட்டால் , இந்நாட்டில் எங்கோ ஓர் மூலையில் இருந்திருப்பார்கள், தேவையில்லாமல் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒரே தொகுதியில் 2_3 கிளோ மீட்டர் தூரத்தில் அட்டாலச்சேனைக்கு தே பட்டியல் என்றும் , சகல வசதிகளும் செய்து கொடுத்தது அவரின் பலயீனத்தால் தோற்றுப்போன ஏற்கனவே தே பட்டியலை அனுபவித்த , மேலும் இரு எம்பிக்களை கொண்டுள்ள கிண்ணியாவுக்கு வழங்குதைப்பற்றியும், ஒரு தரமான நபர் இன்றி வண்ணிக்கு தே பட்டியல் வழங்குவது பற்றியும் , எதிர்காலத்தி்ல் வெளி மாவட்டங்களில் போட்டியுடுவதா என்ற தீர்மானம் இல்லாமல் தே பட்டியல் வழங்குவது பற்றி, சிந்தித்து சிந்தித்து காலத்தை நேரத்தை வீணடிக்காமல் , ஆட்களுக்கிடையில் சலிப்புத்தன்மையை ஏற்படுத்தாமல் , வருகின்ற பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் கருதியும் , சமூகத்தின் நலன் கருதியும், கட்சியின் இருப்பு , பாதுகாப்பு, வளர்ச்சி கருதியும், மற்ற குழுவுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையை மதித்து , எதிர்காலத்தில் அவர்களை கட்சியில் உள்வாங்கவும், எதிர்வரும் உள்ளூர் , மாகாண தேர்தல்களை மிக்க பலத்துடன் எதிர்கொள்ள,
சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் , இஞ்சினியர் அப்துர்ரஹ்மான் ஆகியோர்களை, மற்ற சமூகத்தவர்கள் அறிமுகப்படுத்தியது போன்று இவர்களையும் எம் சமூகத்துக்கு தேசிய பட்டியல் மூலம் அறிமுகப்படுத்தி , அமானிதத்துக்கு நல்லதோர் தீர்வினை உங்கள் மூலம் எதிர்பார்த்தவனாக ,
என்றும் உங்கள்,
முபீன்.
