Featured Home (TOP)

Recent Comments

Monday, August 24, 2015

avathani Media Network

அவதானி செய்தியும், SLMC தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபீனின் விளக்கமும்


அவதானி இணயத் தளத்தில் இன்று "SLMC தலைவர் ஹகீமுக்கு சகோதரர் முபீனின் கடிதம்"  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது.

இக்கட்டுரை தொடர்பில் SLMC யின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளருமான முபீன் அவர்கள் அவதானியோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு   அது தொடர்பில்  குறிப்பொன்றையும் தெரிவித்திருந்தார்.

அதாவது

"தங்கள் இணயத் தளத்தில் வெளியான இக்கட்டுரை முபீன் என்ற பெயரில் வெளியாகியுள்ளதால் பலர் என்னோடு நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு இதை நீங்கள்தானா எழுதினீர்கள் என்று கேட்கிறார்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முபீன் என்ற பெயரில் எனது பெயரே சிலாகித்துப் பேசப்படுவதாலும் நான் அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளராக இருப்பதாலும் பலஊர்களிலிருந்தும் என்னிடம் விசாரிக்கிறார்கள்.

ஆகவே, உங்கள் இணயத்தளத்தில் வெளியான செய்திக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும். எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பு

எமது இணயத்தளத்தில் வெளியான கட்டுரையில் சகோதரர் முபீன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர SLMC யின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபீன் என்று குறிப்பிடப்படவில்லை. என்றாலும் மற்றவர்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்க்க குறிப்பைத் தருகிறோம்.

-அவதானி       

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :