( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று ஜாமியத்துஸ் ஸித்தீக்கியா பள்ளிவாசல் மண்டபத்தில் இடம் பெற்றது.
அரபுக் கல்லூரித் தலைவரும், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ்.எஸ்.எம்.பி.முகைதீன் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவரும், குவாஸி நீதிபதியுமான அல்ஹாஜ்.எஸ்.எம்.அலியார் மௌலவி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மௌலவியாக்களுக்கான பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இவ்விழாவில் சங்கைக்குரிய உலமாக்கள், கல்விமான்கள், ஸித்தீக்கியாவுக்கு உதவிய வள்ளல்கள், தனவந்தர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் 07 வருடங்கள் இஸ்லாமியக் கல்வியைக் கற்றுத் தேறிய 30 மௌலவியாக்களுக்கு 'மௌலவியா, ஹாபிளா' பட்டங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மௌலவியா மாணவர்களின் இஸ்லாமிய கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றன.