கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 14 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.
இவர்களுள் அம்பாறையிலிருந்து விமரவீர திசாநாயக்கா எம்.ஐ.எம்.மன்சூர் தயா கமகே ஆகிய மூவரும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருநடது அலி சாகிர் மௌலானா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து இம்ரான் மஹ்ரூப் ஐவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த ஐவரும் தமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி விலகல் கடிதங்களை ஏற்கனவே மாகாணசபைப் பேரவைச் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
இந்த வெற்றிடங்களை நிரப்புமாறு தேர்தல் ஆணையாளருக்கு தாம் அறிவித்துள்ளதாக பேரவைச் செயலாளர் எம்.சீ;.எம்.செரீப் தெரிவித்தார்.
-virakesary
