கொழும்பு வெள்ளவத்தையில் நேற்றிரவு ரயிலில் மோதுண்டு உயிரிழந்த நபர் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு ஐந்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
