Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 24, 2015

avathani Media Network

குளவிக் கொட்­டுக்கு இலக்­காகி இளைஞர் பலி

ஒலுவில் கிரா­மத்தில் குளவிக் கொட்­டுக்கு இலக்­கான இளைஞர் ஒருவர் சிகிச்சை பல­னின்றி கடந்த திங்­கட்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளார்.
ஒலுவில் தேத்­தா­வடி வீதியைச் சேர்ந்த பாறூக் முஹம்­மது பாயிஸ் (வயது 21) என்ற இளை­ஞனே மேற்­படி சம்­ப­வத்தில் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­வ­ராவார்.
ஒலுவில் பிர­தே­சத்தின் ஓ.பி.ஏ.வீதி­யி­டாக துவிச்­சக்­க­ர­வண்­டியில் சென்று கொண்­டி­ருந்த மேற்­படி இளை­ஞனை பனை மரத்­தி­லி­ருந்த 30 க்கும் மேற்­பட்ட குளவிக் கூட்டம் தாக்­கி­யுள்­ளது.
குளவிக் கொட்­டுக்கு ஆளான மேற்­படி இளைஞர் ஒலுவில் மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக கல்­முனை அஷ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :