Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 22, 2015

avathani Media Network

அரபா தின நோன்பு


(எஸ்.எம்.எம். முஸ்தபா)

அரபா தின நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது சென்ற வருடத்திற்கும் (அவற்றில் செய்யப்பட்ட சிறு பாவங்களுக்கு) குற்றப்பரிகாரமாக அது அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் - அபூ கதாதா (ரழி)  ஆதாரம் - முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் அல்லாஹ்வுக்காக ஒரு நாளில் நோன்பு நோற்கின்றாரோ அல்லாஹ் மறுமை நாளில் அவனுவடய முகத்தை நரகத்தை விட்டும் எழுபது வருட தொலை தூரமாக்குகின்றான். (அறிவிப்பவர் - அபூ சாயிதுல் குத்ரி (ரழி)  ஆதாரம் - முஸ்லிம்

யார் ஒருவரை நோன்பு துறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையை போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

துல்ஹஜ் பிறை 9வது நாளான அரபா தினம் 23.09.2015 ஆந் திகதி இடம்பெறுவதால் இந்த நோன்பை நாம் நோற்று அதிகம் நன்மைகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வோமாக...

நோன்பு துறக்க வைக்கும் பணியில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அதன் தஃவா மற்றும் வழிகாட்டல் பிரிவின் ஊடாக இந்த சுன்னத்தான நபி வழியை கைக்கொண்டு வருகிறது. 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :