ஐ.தே.கவுடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு வருட காலத்திற்குள் புதிய தேர்தல் முறை யொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரை வாழ்த்தி உரையாற்றும் போதே நிமல் சிறிபால.டி.சில்வா இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், பாராளுமன்ற சம்பிரதாயங்களை முழுமையாக மதிக்கும் ஒருவர் சபாநாயகராக தெரிவுசெய்யப் பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் பெரும் மகிழ்ச்சிய டைகிறோம். உங்கள் மீதான அளப்பரிய நம்பிக்கையின் காரணமாகவே நீங்கள் ஏகமனதாக தெரிவுசெய்யப் பட்டிருக் கின்aர்கள்.
அந்த நம்பிக்கையை மதித்து சகலரையும் சமமாக நடத்துவீர்கள் என எதிர்பார்க்கின்றோம். பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு உள்ள தவறான அபிப்பிராயங்களை மாற்றி மதிப்பு நிறைந்த இடமாக மாற்ற வேண்டும்.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நீங்கள் மக்களின் எண்ணங்களை அறிந்து செயற்படக்கூடியவர். பாராளுமன்றத்தில் புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் நீங்கள் முன்நின்று செயலாற் றியுள்Zர்கள்.
கடந்த அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் கீழ் தேர்தல் முறையை மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஐ.தே.கவுடன் தற்பொழுது செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு வருட காலத்தினுள் புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடிய எம்பி ஒருவரை நியமிக்கும் புதிய தேர்தல் முறை நாட்டுக்கு மிக அவசியமாகும்.
இந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்று ஒரு வருட காலத்தினுள் அதனை நிறைவேற்றப் பங்களிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு வருட காலத்தினுள் மக்கள் மனமகிழ்ச்சி அடையக்கூடிய விடயமொன்றை செய்து முடிக்கலாம்.
19ஆவது திருத்தத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களை துரிதமாக செயற்படுத்தி அதன் பலன் மக்களைச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனைய சபாநாயகர்களைவிட உங்களுக்கு பல முக்கிய பொறுப்புக்கள் காத்திருக்கின்றன.
