Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 2, 2015

avathani Media Network

பாசிக்குடா கடலில் பிக்கு மூழ்கி பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் ஒன்று செவ்வாய்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணம் மேற்கொண்டு கடந்த 30.08.2015 அன்று கொழுப்பு பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்ட 34 பௌத்த பிக்கு மாணவர்கள் பல இடங்களுக்கும் சென்று செவ்வாய்கிழமை பாசிக்குடாவிற்கு வந்து குளிக்கும் போதே தெனிகே சந்தன (வயது – 22) என்ற பௌத்த பிக்கு நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
இவர் குருணாகல் கிரிவல ஸ்ரீ அரோகா ராமய விகாரையைச் சேர்ந்தவர் என்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் என்றும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,
Source - kathiravan

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :