இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல கப்பல் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் கொழும்பு – கொச்சி ஆகிய இடங்களுக்கு சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை- இராமேஸ்வரம் இடையிலும் கப்பல் சேவையை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தவிர, அம்பாந்தோட்டை முதல் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமான சேவைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகப் பணிகள் முடிவடைந்ததும் வடக்குக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும் சிங்ஹா குறிப்பிட்டுள்ளார்.
