Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 17, 2015

avathani Media Network

கொட்டதெனியாவ சிறுமி கொலை சம்பவம் தொடர்பில்அயலில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் விசாரணை

திவுலப்பிட்டிய - கொட்டதெனியாவயில் சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அயலில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் கொலை தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் 30 இற்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தாய் , தந்தை , பாட்டனார், பாட்டி ஆகியோரும் அடங்குகின்றனர்.

இதேவேளை சிறுமி தொடர்பில் மேலும் அவதானமாக இருந்திருந்தால் இக்கொலையை தவிர்த்திருக்க முடியுமென அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் மகளின் மரணத்தினால் மனமுடைந்து போனதாகவும் , இதனால் அவரது பூதவுடலின் அருகில் கூட நிற்கமுடியாத அளவுக்கு துயரத்தில் இருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


தன்மேல் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் அவரது தந்தை இதன்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிறுமியின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :