Featured Home (TOP)

Recent Comments

Thursday, September 17, 2015

avathani Media Network

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன்; காரைதீவு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய காரைதீவு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நேற்று காரைதீவு கணகரெத்னம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

காரைதீவு இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்ற இவ்விளையாட்டு விழாவில் காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகளான யூ.எல்.ஏ.மஜீட், எஸ்.எம்.ஏ.லத்தீப், கல்முனைப் பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.சீ.எம்.ஹாறூன், காரைதீவு பிரதேச விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், எனப்பலரும் இதில் கலந்து கொண்டனர்.

காரைதீவு பிரதேசத்திலுள்ள பத்துக்கு மேற்பட்ட முன்னணிக் கழகங்களின் விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்ட இவ்விழாவில் சிறந்த வீரர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அதிதிகளினால் வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.








avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :