Featured Home (TOP)

Recent Comments

Friday, September 4, 2015

avathani Media Network

திரு சம்மந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்ம மக்களுக்கு கிடைத்த வெற்றி- முதலமைச்சர் நஸீர்

பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நாசீர் அஹமட், சம்மந்தனுக்கு கிடைத்துள்ள பதவி குறித்து முஸ்லிம் சமூகம் முழுமனதுடன் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சித் தலைவராக சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது:
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோரின் புதிய நல்லாட்சியில் எதிர் கட்சித் தலைவராக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாமை இந்த நல்லாட்சியின் சிறப்பாகக் கொண்டு செல்வதற்கு வளிவகுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
1977 ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் அமிர்தலிங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைப்வராக தெரிவு செய்யப்பட்டு சிறுபான்மையினத்தவர்களுக்கு பெருமை சேர்த்தார். அதேபோன்று  38  வருட காலத்திற்க்குப் பிறகு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
இனப்பிரச்சனை தீர்வில் சம்மந்தன் போன்றவர்களின் கருத்துக்களும் முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் முதல்மைச்சர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்தார்.
ஆங்கில, தமிழ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற சம்மந்தன் சிங்கள மொழியிலும் நன்கு பரீற்சயம் பெற்றவர். ஆழமான அரசியல் அறிவைக்கொண்ட அவர் சிறந்த பேச்சாளாரும்கூட பாராளுமன்றத்தின் அவர் வாதிடும் திறமை அலாதியனது.
கிழக்கு மாகாணத்தில் பிறந்த சம்மந்தன் எதிர்கட்சித் தலைவரானமை கிழக்கு மண்ணுக்கு பெருமை தருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

SL.MUNAS-JP
Source - meelparvai.net

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :