Featured Home (TOP)

Recent Comments

Monday, September 14, 2015

avathani Media Network

அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரழி) ஆட்சிபோன்று அமையவேண்டும் – மஹிந்த

தனி நபராலாயோ அல்லது தனி குழுக்களினாலோ ஜனநாயகத்ததை ஏற்படுத்த முடியாது “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதற்கு அமைவாக அனைவரினதும் ஒத்துழைப்பின் காரணமாகவே இன்று உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடிந்தது. என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தின் 60 வருடப் பூர்த்தியினையிட்டு நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா பத்ர் ஜூம்மா பள்ளிவாசலில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
சகல மதத்தவர்களும் ஒட்டு மொத்தமாக எதிர்பார்ப்பது ஜனநாயம், இந்த ஜனநாயகத்தை எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. இந்த ஜனநாயகத்தைப் பற்றி இஸ்லாம் மதம் குர்ஆன், ஹதீஸ் மூலம் மிக ஆனித்தரமாக வலியுறுத்தி கூறியுள்ளது. அதனை நாம் தற்போது எமது நாட்டில் நிலைநிறுத்தியுள்ளோம் என்பதை எல்லோரும் பெரும் மகிழ்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தொடர்ச்சியாக நாம் ஜனநாயக வழிமுறைகளில் ஒற்றுமையாக அடம்பன் கொடிபோல் செயற்படவேண்டும். நாம் சிங்கள மொழியில் கேட்டாலும், அரபு மொழியில் கேட்டாலும், ஆங்கில மொழியில் கேட்டாலும், தமிழ் மொழியில் கேட்டாலும் கேட்கின்ற விடயம் ஒன்றுதான் அதுதான் ஜனநாயகம் அது பாதுகாக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய ஆட்சியின் கலிபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான் , அலி (ரழி) ஆகியோர்களின் காலங்களில் எவ்வாறு ஜகநாயக ரீதியில் ஆட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததோ, அதேபோன்று அவர்கள் செய்த அந்த ஆட்சியை நாம் மிகத் தெளிவாக விளங்கி இன மத வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)
– அபு அலா –
Source - dailyceylon

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :