Featured Home (TOP)

Recent Comments

Tuesday, September 29, 2015

avathani Media Network

ஊடகவியலாளர்கள் மிகவும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் ஏனையோருக்கு முன்மாதிரியாகவும் செயற்படவேண்டும்- ஏ. எல். டீன் பைறூஸ்

(எம்.எச்.எம்.அன்வர்)

ஊடகவியலாளர்கள் மிகவும் கூட்டுப்பொறுப்புணர்வுடனும் ஏனையோருக்கு முன்மாதிரியாகவும் செயற்படவேண்டும் அப்போதுதான் எங்களுக்கிடையேயுள்ள உறவினைக்கட்டியெழுப்ப முடியும் இவ்வாறு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ எல் டீன் பைறூஸ் தெரிவித்தார்

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி மீடியா போர அங்கத்தவர்கள் கலந்துகொண்ட ஊடக உறவுகளின் ஒன்று கூடல் காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது இதன்போதே இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் 
ஊடகம் என்பது இன்று முக்கிய ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது வெறுமனே நாம் இதனை பயன்படுத்தக்கூடாது சமூகத்திற்கு பிரயோசனமுள்ளதாக அதனை பயன்படுத்தவேண்டும் ஊடகவியலாளர்கள் மேலும் தங்கள் திறணை வளர்த்துக்கொண்டு பல முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டும் தங்களுக்குள்ள திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பாடுபட வேண்டும் இந்த அடிப்படையிலேயே இந்த மீடியர் போரம் செயற்பட்டுவருகின்றது இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்

மேற்படி நிகழ்வில் ஊடகவியலாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக கலை கலாச்சார நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகள், அச்சு ஊடகமா சமூக வலைத்தளங்களா எனும் ஊடக பாராளுமன்றம் நிகழ்வு, பேச்சு , இசையில்லாத பாடல்கள், மதியன்பன் மஜீத் அவர்களின் கவிதை நூல் வழங்கப்பட்டமை அத்துடன் தங்கள் அனுபவங்கள் திறமைகள் என்பன ஊடகவியலாளர்களுக்கிடையே  பரஸ்பரம் பகிரப்பட்டு இந்நிகழ்வுகள் அனைத்தும் முழு நிலவில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது 







avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :