Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 6, 2015

avathani Media Network

மஹிந்தவுக்கு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இல்லம் வழங்கப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு 7 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றே மஹிந்தவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த வீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பிஜட் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் குடியேறியதனைத் தொடர்ந்து, இந்த இல்லம் மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இல்லத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ச அதில் குடியேறுவார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் வழங்கப்படுவது சட்ட ரீதியானதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :