Featured Home (TOP)

Recent Comments

Sunday, September 6, 2015

avathani Media Network

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மார்ச்சில்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. நாடு ­பூ­ரா­க­வு­முள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 335 இல் 301 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. இதே­வேளை ஏனைய 34 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதவிக் காலம் அடுத்த மாதம் 15 ஆம் மற்றும் 31 ஆம் திக­தி­க­ளுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளன.
பத­விக்­காலம் முடி­வ­டைந்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வா­கங்கள் விசேட ஆணை­யா­ளர்­களின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. அடுத்த மாதம் பத­விக்­காலம் நிறை­வ­டை­ய­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வா­கமும் தேர்தல் நடை­பெறும் வரையில் விசேட ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன.
எனவே நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை தொகு­தி­வாரி முறையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அது தொடர்­பி­லான எல்லை நிர்­ணய வர்த்­த­மானி அறி­வித்தல் விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.
நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலைத் தொடர்ந்து இவ்­வ­ரு­டமே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெறும் என ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் எதிர்­வரும் நவம்பர் மாதம் புதிய பாரா­ளு­மன்­றத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் இவ்­வ­ருடம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை.ஆகையினால் எதிர்வரும் மார்ச்மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிய வருகிறது.
Source- virakesary

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :