Featured Home (TOP)

Recent Comments

Friday, September 4, 2015

avathani Media Network

பள்ளிவாசல் காணி தனி நபரால் ஆக்கிரமிப்பு : பொலிஸில் முறைப்பாடு

மாத்­தளை, கந்­தே­நு­வர தோட்­டத்தில் அமைந்­துள்ள நூர் ­ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணியை தோட்­டத்தில் தொழில் புரியும் மாற்று மதத்­தவர் ஒருவர் சட்­ட­வி­ரோ­த­மாக வீடொன்­றினைக் கட்டி உரிமை கொண்­டாடி வரு­வ­தாக கந்­தே­நு­வர பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட வீடு பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான மைய­வா­டிக்கு அருகில் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வீட்டைச் சுற்றி அமைக்­கப்­பட்­டுள்ள வேலியை எவரும் அப்­பு­றப்­ப­டுத்­தாத வகையில் வேலிக்கு மின்­சாரக் கம்­பிகள் இணைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத்­த­லைவர் ஐ.நஸுர்தீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

ஒரு ஏக்கர் 2 ரூட் பரப்­ப­ளவைக் கொண்ட இக்­காணி 1963ஆம் ஆண்டு மர்ஹூம் மீசான் ஹாஜி­யாரால் பள்­ளி­வா­ச­லுக்கு வக்பு செய்­யப்­பட்­ட­தாகும். பள்­ளி­வாசல் வக்பு சபையில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

3 மாதங்­க­ளுக்கு முன்பு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இவ்­வீட்டில் மாற்று மதத்­தவர், குடி­யி­ருக்­காது விட்­டாலும் அப்­பு­றப்­ப­டுத்திக் கொள்ள மறுத்து உரிமை கொண்­டாடி வரு­கிறார். இப்­ப­கு­தியில் 56 முஸ்லிம் குடும்­பங்கள் இருக்­கின்­றன.

குடும்­பத்­தி­லுள்­ள­வர்கள் பெரும்­பா­லானோர் அரு­கி­லுள்ள நக­ரத்­துக்கும் தோட்­டத்­துக்கும் வேலைக்குச் செல்­வதை சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டே இவ்­வீடு கட்­டப்­பட்­டுள்­ளது எனவும் ஐ.நஸுர்தீன் தெரி­வித்தார்.

காணி பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மா­னது என்­ப­தற்­கான காணி உறுதி, வரை­படம், பள்­ளி­வாசல் பதிவு போன்ற ஆவ­ணங்கள் எம்­மிடம் இருந்தும் பொலிஸார் கட்­டப்­பட்­டுள்ள வீட்­டுக்கு எதி­ரா­கவும், சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கு எதி­ரா­கவும் எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக மேற்­கொள்ள வேண்­டிய சட்­ட­ந­ட­வ­டிக்­கைகள் பற்றி ஆராய்­வ­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாக சபை இன்று வெள்­ளிக்­கி­ழமை கூட­வுள்­ளது.

கட்­டப்­பட்­டுள்ள வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள வேலிக்கு மின்சாரம் பாய்ச்சிய கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானதெனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Source - vidivelli.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :