Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 20, 2015

avathani Media Network

சிறுவன் மீது மூவர் துஷ்­பி­ர­யோ­கம்; ஒருவர் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி முஹாஜிரின் கிராமத்தில் சிறு­வ­னொ­ரு­வ­னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கடந்த நேற்றிரவு கைது செய்­யப்­பட்­ட­தாக தெரிவித்த பொலிஸார் இவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை மாலை வயதுடைய இரு சிறுவர்கள் மிச்நகர் மீராகேணி கிராமத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு துவிச்சக்கரவண்டியில் வந்த மூவர் சிறு­வ­னொ­ரு­வனை மடக்கிப் பிடித்து அருகிலுள்ள பற்றைக் காட்டுக்குள் கொண்டு சென்று சிறுவனுக்கு போதைவஸ்து கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
இச்சிறுவன் எழுப்பிய கூக்குரல் கேட்டு உரிய இடத்தை நோட்டமிட்டுப் பார்த்த கிராமத்தவர்கள் அங்கு சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்து விரைந்துள்ளனர். அச்சமயம் சந்தேக நபர்கள் சிறுவனைக் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
ஊர்மக்களால் காப்பாற்றப்பட்ட சிறுவனை உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர்கள் மூவரைத் பொலிஸார் தேடி­வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :