Featured Home (TOP)

Recent Comments

Tuesday, October 20, 2015

avathani Media Network

கருணா - பிள்ளையானின் கொலை முகாம்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்

கடந்த காலத்தில் கருணா - பிள்ளையான் ஆகியோரினால் முன்னெடுத்து வந்த கொலை முகாம் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
திருகோணமலை - சேருவில பிரதேசத்தில் இயங்கி வந்த இராணுவ முகாமில் திட்டமிட்ட பல கொலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட, அரச புலனாய்வு பிரிவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் உடலம் திருகோணமலை கடலில் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எக்னெலிகொட, பிள்ளையான் தலைமையில் இயங்கிய சேருவில முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
அத்துடன் முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் பலரையும் கொலை செய்து, சேருவில பிரதேசத்தில் சேற்றுக்குள் புதைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பின்னர் குறித்த சடலங்கள் மீண்டும் வெளியே வந்தமையினால் திருகோணமலைக்கு கொண்டு சென்று கடலுக்கு மூழ்கடித்துள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.
 
ஆரம்பத்தில் கருணா அம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி செல்லப்பட்ட சேருவில முகாம் பின்னர் பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி செல்லப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அந்த முகாம் நீக்கப்பட்டுள்ளது.
 
சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் கருணாவிடமும் பிள்ளையானிடமும் கூட்டாக இணைந்து செயற்பட்ட குழுவினால் நடத்தி செல்லப்பட்ட கிழக்கு முகாமில் நூற்று கணக்கிலான தமிழ் இளைஞர்களை கொலை செய்ததுடன், பணக்கார முஸ்லிம்களும் கடத்தி சென்று மிரட்டி பணம் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
paristamil.com

 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :