வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஜெயந்தியாய மீள்குடியேற்றப் பிரதேசத்தில் சனிக்கிழமை புகுந்த யானைகளின் அட்டகாசத்தால் ஒரு கடை மற்றும் நெற் களஞ்சியசாலையும்
உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஜெயந்தியாய மீள்குடியேற்ற கிராமத்தை அண்மித்த பொத்தானை மற்றும் வெல்லாமைச்சேனை காட்டுப் பகுதியிலிருந்து வந்த யானைகள் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடை மற்றும் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கடை என்பவற்றுக்குள் புகுந்து கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதமாக்கியுள்ளது.
யானைகளின் தொல்லைகளிலிருந்து எங்களது பகுதியை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
