Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 8, 2015

avathani Media Network

மக்காவில் காணாமல்போன இலங்கையர்கள் இருவரும் உயிரிழப்பு

இலங்­கை­யி­லி­ருந்து புனித ஹஜ் கட­மைக்­காக சென்று மினா நகரில் ஏற்­பட்ட சன நெரிசல் அனர்த்­தத்­தை­ய­டுத்து காணாமல் போன இரு யாத்திரிகர்களும் உயி­ரி­
ழந்­துள்­ள­மையை சவூ­தியில் உள்ள இலங்கைத் தூத­ரகம் உறுதி செய்­துள்­ளது. 

பெருநாள் தினத்­தன்று மினா நகரில் ஏற்­பட்ட சன நெரிசல் அனர்த்­தத்தில் நூற்­றுக்­க­ணக்­கானோர் மர­ண­மா­கிய நிலையில் மேலும் நூற்­றுக்­க­ணக்­கானோர் காயங்­க­ளுக்­குள்­ளாகி மக்­கா­வி­லுள்ள வைத்­திய சாலை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந்த அனர்த்தம் நடந்த தினத்­தி­லி­ருந்து கொழும்பைச் சேர்ந்த தம்­ப­தி­யினர் காணாமல் போயி­ருந்­தனர்.

இவர்கள் தொடர்ந்தும் தேடப்­பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் அப்துல் அஸீசின் (57) ஜனாசா மக்கா ஜனாசா சாலையில் அவ­ரது சவூ­தியில் இருக்கும் உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டது. 

அவ­ரது மனைவி றோசானா ஹாரா (55)வின் ஜனாசா நேற்றுக் காலை உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. இரு­வர்­க­ளி­னதும் ஜனா­சாக்கள் மக்­கா–­மினா நக­ருக்­கி­டை­யி­லுள்ள ஜனாசா சாலை­யி­லேயே அடை­யாளம் காணப்­பட்­ட­தா­கவும் அவர்கள் அனர்த்தம் இடம்­பெற்ற போது தமது அடை­யாள அட்­டை­களை கழுத்­துப்­பட்­டியில் அணிந்­தி­ருந்­ததால் அவர்­க­ளது விப­ரங்­களை சவூதி அதி­கா­ரிகள் கண­னிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும் முஸ்லிம் விவ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார். 

இரு­வர்­க­ளதும் ஜனா­சாக்கள் மக்­காவில் நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு உற­வி­னர்­களும் தமது விருப்­பத்தை தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவ்­வாறே நல்­ல­டக்கம் செய்­யப்­படும் எனவும் அவர் கூறினார். 

காணாமல் போன இரு­வர்­க­ளையும் பல நாட்­க­ளாக மக்கா வைத்­தி­ய­சா­லை­களில் தேடி­வந்த ஹஜ்­குழு உறுப்­பி­னர்­க­ளுக்கும், டாக்­­டர்­க­ளுக்கும் சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரி­க­ளுக்கும் அமைச்சர் நன்­றி­களைத் தெரி­வித்தார். 

மினா சன­நெ­ரி­சலில் இறந்­த­வர்­களின் எண்­ணிக்கை 1100 என சவூதி அர­சாங்கம் உத்­தி­யோக பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை விபத்துக் காயங்­க­ளுக்­குள்­ளான நூற்­றுக்­க­ணக்­கானோர் தொடர்ந்தும் மக்கா பிர­தே­சத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். இவ்­வி­பத்தில் இலங்­கையர் எவரும் காயங்­க­ளுக்­குள்­ளா­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து 2800பேர் ஹஜ் கட­மைக்­காகச் சென்­றி­ருந்­தனர். இவர்­களில் அரை­வா­சிக்கும் மேற்­பட்டோர்.

கட­மை­களை நிறைவு செய்து விட்டு நாடு திரும்­பி­யுள்­ளனர். தொடர்ந்தும் தொகுதி தொகு­தி­யாக நாடு திரும்­பு­கின்­றனர்.

இறுதித் தொகுதியினர் எதிர்வரும் 21ம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.

சவூதி அரசாங்கம் விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு விசாரணைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :