Featured Home (TOP)

Recent Comments

Thursday, October 8, 2015

Unknown

ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த மீனவரின் சடலத்தினை
சக மீனவர்கள் வியாழக்கிழமை வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலையில்
சேர்த்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வைத்தியர் அபுகலாம் ஆசாத் வீதி ஓட்டமாவடியினைச் சேர்ந்த முகமட்தம்பி பதூர்தீன் (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேற்படி நபர் கடந்த 2015.10.04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சக மீனவர்கள் இருவருடன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் சடலமாக இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாரடைப்பு காரணமாக கடலில் மிதந்த வலையின் மீது தவறி விழுந்த போது அவரினை மீட்ட போதிலும் அவரின் உயிரினை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக அவருடன் தொழிலுக்கு சென்ற சக மீனவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :