Featured Home (TOP)

Recent Comments

Sunday, October 25, 2015

avathani Media Network

இது மழையல்ல நிஜம்!

(காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்)

ஊரில்
இன்றும் மழை நாள்தான்
வீட்டை விட்டு
வெளியில் செல்ல..
மனமில்லை
ரோட்டு வெள்ளம்
ரோந்து போகிறது..
பாவம் இடியப்பம் விற்கும்
பெண்..நனைன்ந்து
நனைந்து ஒற்றைக்
குடையில் கதவைத்
தட்டுகிறாள்..
ஆட்களில்லாத
அரச
பேருந்து அப்படியே
தண்ணீரை பீய்ச்சி
அடித்துக் கொண்டு
உறுமி நகர்கிறது..
இன்றும்
மழையின்
பாடல் நாள்தான்
அடுத்த வீட்டுக்
காரனைப் பற்றி
அக்கறை இல்லாத
பக்கத்து வீடுக்காரனின்
கூரை நீர் என் வளவை
ஆறாக்குகிறது..
பக்கத்து ஹோட்டல்
டீக் கடையில்
பராட்டா தட்டும்
சத்தம் .சாப்பிடாமல்
குளிக்காமல் இன்னும்
சுருட்டிப் படுக்க
பில்லியன் சுகம்.
கோடை ராசா
மாரி ராசாவிடம்
கொடுத்ததாய் சொல்லும்
மூத்தம்மாமார்..
உலகம் தடம்
புரண்டாலும்
ஆலவூட்டுக் கட்டிலில்
வெத்திலை வட்டாவுடன ட்ரைவிங்..
ஏழை வீட்டுக்
குசினி ஒழுகிக்
கரைந்து
அடுப்பின் உசிரை
துண்டாக்கி..
இயல்பு வாழ்க்கையை
புரட்டுகிறது...
-காத்தான்குடி ஏ.எச்.எம்.ஜிஹார்-

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :