(முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர்)
நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் 2015-10-25 இன்று மாபெரும் இரத்ததான நிகழ்வு நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது.
இவ்விரத்ததான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால காசிம் அவர்கள் இந்நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்
இந்த மாபெரும் இரத்ததான நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், இளைஞ்சர்கள் மற்றும் பெண்களென 100க்கும் அதிகமானோர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்.
மேலும் லகான் விளையாடுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் அவர்கள் கூறுகையில் தான் சுகாதார பிரதி அமைச்சராக பதவியேற்று ஒரு மாத காலங்களாகியுள்ளது இக்காலப்பகுதிக்குள் எனது சேவையை ஒழுங்கான முறையில் செய்துகொண்டு வருகின்றேன் மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை ஆராய்ந்து அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டும்வருகின்றேன் அதில் தற்போது 30 வீதமான பணிகள் முடிவடைந்துள்ளது மேலும் இவ்வைத்தியசாலைக்கு விரைவில் இரத்த வங்கியொன்றினை அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்துகொண்டுவருகின்றேன் என அமைச்சர் கூறினார்.








2 comments
Write commentsவாழ்த்துக்கள் சுகாதார பிரதி அமைச்சரே உங்கள் நற் பணி தொடரட்டும்....முகவெற்றிலைa(கல்முனை) தொகுதியினை பிரதிநித்துவம் செய்யும் விளையாட்டு பிரதி அமைச்சரின் இரத்த தான நிகழ்வொன்றை அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்....நிறைவேறுமா.....????
Replyநிந்தவூர் லகான் விளையாட்டு கழக ஏற்பாட்டில் நிகழ்ந்த இரத்த தான நிகழ்வில் பிரதி சுகாதார அமைச்சர் பங்கேற்றது போல .. கல்முனையிலும் விளையாட்டு கழக ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு அஸ்ரப் ஞாபகார்த்த நிகழ்வு ஏற்பாடு செய்பட்டு விளையாட்டு பிரதி அமைச்சர் அதிதியாக பங்கேற்க்கும் நிகழ்வு எப்போது நிகழுமோ ....????
Reply