காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி டெலிகொம் வீதியில் அமைந்துள்ள ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று காலை8.30 தொடக்கம் 03.00மணி வரை இவ் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தம் போதுமான தாக இல்லை நாளாத்தம் இரத்த மாற்று நோயாளிகள் அதிகரித்துச்செல்வதால் இரத்தம் பாரிய அளவு தேவை யாகவுள்ளது.
இதனை கவனத்திற் கொண்டு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இதில் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்..
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”
(ஜு னைட்.எம்.பஹ்த்)





