Featured Home (TOP)

Recent Comments

Friday, October 9, 2015

avathani Media Network

வஸீமுக்கு நெருக்கமான யுவதி ஒருவரிடம் விசாரணை நடத்த முடிவு

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கொலை என நம்­பப்­படும் மர்ம மரணம் குறித்து, அவருக்கு மிக நெருங்­கிய யுவதி ஒரு­வரை விசா­ரணை செய்ய குற்றப் புல­னாய்வுப் பிரிவு தீர்­மா­னித்­துள்­ளது.


வஸீம் தாஜு­தீ­னுக்கு மிக பழக்­கப்­பட்­டவர் என அறி­யப்­படும் குறித்த யுவ­தியை எதிர்­வரும் சில நாட்­க­ளுக்குள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வரு­மாறு அழைப்பு விடுக்க விசா­ரணை அதி­கா­ரிகள் தீர்­மா­னித்­துள்ள நிலையில்,  இந்த விசா­ர­ணை­யா­னது மிக விரைவில் இடம்­பெறும் என எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில், தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக உறு­தி­யாக நம்பும் புல­னாய்வுப் பிரி­வினர்,  பிர­பல அர­சி­யல்­வா­தி­யொ­ரு­வரின் மகனால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விளை­யாட்டு மைதானம் ஒன்று தொடர்­பி­லான கொடுக்கல் வாங்கல் தொடர்பில், வஸீம் தாஜுதீன் தனது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அதற்­காக இந்த கொலை இடம்­பெற்­றி­ருக்­கலாம் எனவும் சந்­தேகம் வெளி­யி­டு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் இந்த விட­யங்கள் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :