கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றினை
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மேற் கொண்டு அங்கு நிலவும் குறைபாடுகளை
வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டரிந்து கொண்டதோடு,
மிக.விரைவில் அதற்கான தீர்வுகளையும் பெற்றுத் தருவதாகவும் உறுதி மொழி
அளித்ததுடன் நிலவுகின்ற குறைபாடுகளையும், ஆளனி பற்றாக் குறைபாடுகளையும் எழுத்து
மூலம்.தனக்கு உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.