ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நானள (27)செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு
விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல ஏற்பாடுகளும் மீள்குடியேற்ற
புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
அவர்களின் தலைமையில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டுநகருக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி காலை மட்டக்களப்பு மங்களராமய
பௌத்த விகாரையில் நடைபெறும் சமய நிகழ்வில் பங்குபற்றுவார்.
அதன் பின்னர் மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கும்
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கும், மட்டக்களப்பு
புனித மரியாள் தேவலாயத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறும்
பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளிளும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதாக
மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.
ஹிஸ்புல்லாஹ் தெறிவித்தார்.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
