Featured Home (TOP)

Recent Comments

Wednesday, October 21, 2015

avathani Media Network

இந்திய பஸ்கள் கொள்வனவில் பாரிய மோசடி

இந்­தி­யா­வி­லி­ருந்து பஸ்கள் கொள்­வ­னவு செய்­ததில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் முன்னாள் ஆட்­சியில் அமைச்ச­ரொ­ரு­வரின் பங்­க­ளிப்பு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்சம் பெற்றுக் கொண்­டது தொடர்­பிலும் தற்­போது சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற உள்­நாட்டு திறை­சேரி உண்­டியல் கட்­டளைச்சட்­டத்தின் கீழான தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றும்­போதே நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;
வரி தொடர்­பான தேசிய கொள்­கை­களை நிறை­வேற்­று­வதில் நெருக்­க­டிகள் ஏற்­ப­டு­கின்­றன.கம்­போ­டியா, மியன்மார் உட்­பட பல நாடு­க­ளி­லி­ருந்து பாக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்டு இங்­கி­ருந்து கொள்­க­லன்­களில் இலங்கைப் பெயரில் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.
ஆனால் இதற்­கான எந்த வரியும் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.தற்­போது அதற்­கான வரியை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம்.வரி­களை அதி­கா­ரிக்கும் போது சில நிறு­வ­னங்கள் நீதி­மன்றம் சென்றும் தாம் செலுத்­திய வரி­களை மீளப் பெற்றுக் கொள்­கின்­றது.இவ்­வாறு நீதி­மன்­றத்தின் செயற்­பா­டு­களால் நாட்­டுக்கு வரி வரு­மானம் குறைந்­துள்­ளது.
இது பல நெருக்­க­டி­களை தோற்­று­விக்­கின்­றது. வரி­களை அதி­க­ரிக்­கு­மாறு சம்­ப­ளத்தை அதி­க­ரிக்­கு­மாறு நீதி­மன்றம் அறி­வித்தால் என்ன செய்ய முடியும்.இவ்­வா­றான நட­வ­டிக்கை நடை­முறை சாத்­தி­ய­மா­னதா?
எனவே நிதியை நிர்­வ­கிக்கும் அதி­காரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. அதனை நீதிமன்றம் பறிக்க இடமளிக்க முடியாது.நாட்டில் 24 மதுபானம் தயாரிக்கும் கம்பனிகள் உள்ளன. ஆனால் 4 கம்பனிகள் மட்டுமே வரி செலுத்துகின்றன என்றார்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :