Featured Home (TOP)

Recent Comments

Monday, November 30, 2015

avathani Media Network

கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு நிகழ்வு- படங்கள்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமைத்துவ சபையின் ஏற்பாட்டில் கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில்; இடம்பெற்றது.

இதன்போது அரச துறையின் உயர் பரீட்சையான (எஸ்.எல்.ஏ.எஸ்.) பரீட்சையில் சித்திபெற்ற ரீ.எம்.எம்.அன்ஸார், ஏ.ரீ.எம்.ராபி, திருமதி சில்மியா ஜாபீர் ஆகியோரும் சுகாதாரத் துறையின் உயர் பதவியினைப் பெற்ற வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ_ம்; அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய செயலாளர்எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்; முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், முன்னணியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஹ_ர், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.பளுலுல் ஹக் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




Read More
avathani Media Network

“துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி-தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நட்டி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2015 இளைஞர் பாராளுமன்றத்திற்கு இணையாக “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-02 166கிராம சேவகர் பிரிவிலுள்ள தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மேற்படி வீதியின் 4ம் குறுக்கு வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 30-11-2015 இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன் போது அதிதிகளினால் காத்தான்குடி தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ம் குறுக்கு உள்ளக வீதிக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நட்டி வைக்கப்பட்டது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் அடிக்கல் நடும் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் ,காத்தான்குடி பிரதேச கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.சில்மி,166 பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. அஸீஸா, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம்.நியாஸ் உட்பட அப்பகுதி பொது மக்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 “துருனு சிரம சக்தி” தேசிய கிராம அபிவிருத்தி வேளைத்திட்டத்தின் கீழ் அடிக்கல் நட்டி வைக்கப்பட்ட குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று தொடக்கம் 15 தினங்களுக்குல் முடிவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Read More
avathani Media Network

வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் மூடிகள் சேதம்- சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் சில மூடிகள் கடந்த சில மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் இவ் வீதியில் பயணம் பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அறபுக் கலாசாலை மாணவர்கள் மிகவும் அவஸ்தைப் படுகின்றனர்.

தற்போது மழை காலம் என்பதால் இரவு நேரங்களில் இந்த வீதியில் மழை நீர் ஓடும் பொழுது மேற்படி வடிகான்களில் மூடிகள் சேதடைந்து காணப்படுவது தெரியாமல் வீதியில் பயணிப்போர் குறித்த வடிகான் குழியில் விழுவதற்கும்,வீதி விபத்து இடம்பெறுவதற்கும் பெரிதும் வாய்ப்பாக மாறியுள்ளது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.





Read More
avathani Media Network

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், டிசம்பர் மாதத்துக்கான சொற்பொழிவு  நாளை 1ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘சமூகத்தீமைகளை களைவதில் சமூகத்திற்குள்ள பொறுப்புக்கள்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, இஸ்லாஹிய்யா பெண்கள் அறபுக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர், அஷ்ஷெய்க் மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் நிகழ்த்தவூள்ளார். மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையூம் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன்  அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128
Read More
avathani Media Network

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 43 வயதுடைய நபர் கைது

நவகத்தேகம பகுதியில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 43 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டுள்ளதுடன் 19 வயது மற்றும் 1  1/2  வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
avathani Media Network

பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்ட காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை வீதி விபத்தில் இருந்து தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு 29-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை அந் நாஸர் வித்தியாலத்தின் தொழினுட்ப ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

அந் நாஸர் வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.அல்லாபிச்சை தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.திலங்க துஷார ஜெயலால் மற்றும் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஆர்.மயூரன் ஆகியோரினால் மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அந்நாஸர் வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள மஞ்சல் கடவையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் மாணவர்களை மஞ்சல் கடவை ஊடாக கடக்க வைக்கும் செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.

மேற்படி செயலமர்வில் மஞ்சல் கடவையில் எவ்வாறு மாணவர்களை கடக்க வைப்பது,மஞ்சல் கடவையில் மாணவர்கள் கடக்க முற்படும் போது ஏற்படும் வீதி விபத்துக்களை எவ்வாறு தடுப்பது, மஞ்சல் கடவையில் மாணவர்களை கடக்க வைக்கும் வீதியில் செல்லும் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது அதன் பின்னர் எவ்வாறு வாகனங்கை செய்கை மூலம் போக வைப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பிலும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













Read More
avathani Media Network

என் கேள்விக் கென்ன பதில்..? சம்மேளனத்திடம் பொதுமகனின் கேள்வி

அண்மை காலமாக எமது காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் கலாச்சார சீர்கேடுகள் மற்றும் மார்க்க விழுமியங்கள் மீரப்படுவது தொடர்பிலும் எமது சகோதரிகளின் பாதுகாப்பு தொடர்பிலான கடிதமொன்று 19/11/2015 ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி பள்ளிவயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை ஆகிய நிறுவனங்களுக்கு என்னால் அனுப்பி வைக்கப்பட்டது.
எனது இக் கடிதத்தை 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை காலை சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்திலும். அதே தினம் இரவு ஜம் இய்யதுல் உலமா சபை கூட்டத்திலும் வாசிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக இருந்தது..
இருந்தும் கடிதம் அனுப்பப்பட்டு இன்றுடன் 11நாட்கள்ஆகியும் இதுவரை எனது கடிதத்திற்கான பதில் அனுப்பப்படவில்லை. அத்தோடு இது விடயமாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை அல்லது நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவுமில்லை..
# இவ் விடயங்களை சுட்டிக்காட்டியும் இதுவரை நடவடிக்கை எடுக்காதுக்கான காரணம் என்ன?
# இது விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் எத்தனை பொதுக்கூட்டம் கூடவேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்க எத்தனை வாரங்கள் தேவைப்படும்?
# கடிதம் அனுப்பியவர் சாதாரண ஒரு பொதுமகன் என்பதால் இக் கடிதத்தில் கவனம் செலுத்தவோ நடவடிக்கை எடுக்கவோ பதில் அனுப்பவோ தேவை இல்லை என்ற நிலைப்பாடா?
# இப்பிரச்சினை காதோடு காதாக பேசி விட்டால் சரி விசாரணை என்ற பெயரில் ஒரு கூட்டம் கூடி முடிந்தால் சரி காலப்போக்கில் எல்லாம் மனறந்திடும் என்ற என்னமா?
# அல்லது வழமையான உறக்கமா?
ஜுனைட்.எம்.பஹ்த்
சரீப்புரக்டர் லேன்..
காத்தான்குடி-2.
Read More
avathani Media Network

மந்திர மோதிரம் தொலைந்ததில் துவண்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிஸ்ட மோதிரம் நேற்று முன்தினம் கொழும்பு ஐந்து நட்சத்திரஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் காணமற்போனதாகவும் எனினும் ஹோட்டல் பணியாளர்கள் அதனை பின்னர் கண்டுபிடித்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சினமன் ஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மகிந்தராஜபக்ச கலந்து கொண்;டவேளை அவரது அதிர்ஸ்டமோதிரம் காணமற்போனதால் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புகடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு  உருவானது. அவர்கள் உடனடியாக தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டவர்களிற்கு இந்தவிடயம் தெரியாத விதத்திலேயே நாங்கள் தேடவேண்டி இருந்தது. ஏனென்றால் காணமற்போனது முன்னாள் ஜனாதிபதியின் அதிர்ஸ்டமோதிரம் என்பது தெரியவந்திருந்தால். ஆதனை கண்டுபிடித்தவர்கள், கூட அதனை திரும்பிக்கொடுப்பதற்கு தயங்கலாம், அதனால் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அதனை தேடவேண்டியிருந்தது.
15 நிமிடத்திற்கு மேல் மேற்கொள்ளப்பட்ட தேடலிற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகில் அந்தமோதிரத்தை பணியாளர் ஓருவர் கண்டுபிடித்தார். என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பலர் இவ்வாறான ஓரு சம்பவம் இடம்பெற்றது தாங்கள் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டனர்.
ஜோதிடம், மந்திரதந்திர விடயங்களில் ஆர்வம்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் கைகளில் பலவர்ணமோதிரங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

சீ­ருடைத் துணி­க­ளுக்கு நாளை முதல் ­வவுச்­சர்கள் வழங்கப்படும்

தேசிய அர­சாங்­கத்­தின்­ சீ­ருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல் ­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளிலும் வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா கல்வி அமைச்­சர்­ அ­கி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரிவித்தார். கல்வி அமைச்­சி­னால் ­வெளியி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே கல்வி அமைச்­சர்­ மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.
அவ்­வ­றிக்­கை­யில் ­மே­லும் ­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
தேசிய அர­சாங்­கத்­தி­னால்­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள நாட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அர­சாங்­கப் ­பா­ட­சா­லை­க­ளில் ­கல்வி பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்கு சீருடைத் துணி­க­ளுக்கு பதி­லாக வழங்­கப்­ப­ட­வுள்ள பண வவுச்­சர்கள் நாளை முதல்­நா­ட­ளா­விய ரீதி­யில்­ உள்ள அனைத்து பாட­சா­லை­க­ளில்­ வி­நி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.450 ரூபா முதல் 1000 ரூபா வரை­யி­லான வவுச்­சர் ­வ­கை­களை பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு இம்­முறை 26,000 மில்­லி­யன்­ ஒ­துக்­கப்­பட்­டுள்­ளது.
அந்­த­வ­கை­யில் ­நாளை 1ஆம் திகதி முதல் சகல பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு இந்த வவுச்­சர்­கள்­ அ­னுப்­பி­ வைக்­கப்­ப­டும் ­கு­றிப்­பிட்ட இந்த வவுச்சர் அதி­பர்­கள் ­ஊ­டாக வகுப்­பா­சி­ரி­யர்­க­ளிடம் சென்று மாண­வர்­க­ளுக்கு சென்­ற­டையும். தமது பிர­தே­சத்தில் வலயக் கல்விப் பணிப்­பா­ள­ரினால் பதிவு செய்­யப்­பட்ட வர்த்­தக கடை­களில் சீரு­டை­களை கொள்­முதல் செய்ய முடியும். மிகுதி பணம்­கி­டைக்­கு­மா­யின் ­மா­ண­வர்­கள்­ த­மக்கு ஏற்­ற­வா­றான எத­னையும் பெற்று கொள்ள முடியும்.
விநி­யோ­கிக்­கப்­படும் வவுச்­சர்கள் மாண­வர்­களின் வயதுக்கு ஏற்­ற­வாறு 15 வகை­க­ளில்­வ­ழங்­கப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் 1–5 மாண­வர்கள் 450 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் 400 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் முஸ்லிம் பாட­சாலை பர்தா தலைக்­க­வசம் 600 ரூபா வவுச்சர், 1–5 மாண­வி­யர்கள் சீருடை 720 ரூபா வவுச்சர், 6–9 மாண­வர்கள் மேற்­சட்டை மற்றும் காற்­சட்டை 525 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் 500 ரூபா வவுச்சர், 6–9 முஸ்லிம் வவுச்சர், மாண­வி­யர்கள் 700 ரூபா வவுச்சர், 6–9 மாண­வி­யர்கள் சீருடை 800 வவுச்சர்,
10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வர்கள் 525 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யரின் துணிக்­காக 600 வவுச்சர், 10–13 முஸ்லிம் மாண­வி­யர்கள் 800 ரூபா வவுச்சர், 10–13 மாண­வி­யர்கள் 1000 ரூபா வவுச்சர், 1–7 காவி உடை 1300 ரூபா வவுச்சர், 8–13 மாண­வர்கள் 1700 ரூபா வவுச்சர், ஆகிய அடிப்ப­டை­யி­லேயே இந்த வவுச்­சர்கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.
இலங்­கையில் உள்ள 43 இலட்சம் மாண­வர்­க­ளது சீருடைகள் விடயத்தில் கடந்த காலத்தில் 4 நிறுவனங்கள் பாரிய நிதி மோசடிகளை செய்தது. இதனை இலகுபடுத்தும் திட்டமாகவே பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை அனைவரும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source-virakesari.lk
Read More
avathani Media Network

வரவுசெலவுதிட்ட நிறைவேற்றத்தின் பின் பலரது அமைச்சுக்கள் பறிமுதல்

தேசிய அரசாங்கத்தின் வரவுசெலவுதிட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவுசெலவுத்திட்டம் மீதானமூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்படலாம் என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, வாக்கெடுப்பு டிசம்பர் 19 ம்திகதி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்து முக்கிய அமைச்சுகளில் மாற்றங்கள் நிகழவுள்ளன,எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை துரிதப் படுத்துவதற்காகவும், தங்களது அமைச்சு பொறுப்புகள் குறித்து திருப்தியடையாத அமைச்சர்களை திருப்திப்படுத்தவுமே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.
Read More
avathani Media Network

காத்தான்குடி சம்மேளனத்திற்கு NTJ அனுப்பிய பதில் கடிதம்

NTJ யின் பிரச்சாரகர் மெளலவி ஸஹ்றான் அவர்களால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு (29.11.15) இன்று அனுப்பிய பதில் கடிதம்










Read More

Sunday, November 29, 2015

avathani Media Network

கற்றோரை கௌரவிப்போம் : நிகழ்வு


 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்கு பிராந்திய தலைமைத்துவசபையின் ஏற்பாட்டில் கற்றோரைக் கௌரவிப்போம் நிழ்வுஅண்மையில் அதன் காத்தான்குடி மக்கள் அரங்கில் நடைபெற்றது.

இதன்போது அரச துறையின் உயர் பரீட்சையான SLAS பரீடையில் சித்தியெய்திய TMM.அன்ஸார், ATM.ராபி, திருமதி சில்மியா ஜாபீர் ஆகியயோரும் சுகாதாரத் துறையின் உயர் பதவியினைப் பெற்ற வைத்திய கலாநிதி ILM.றிபாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
NFGGயின் கிழக்குப் பிராந்திய செயலாளர் MACM.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான், முன்னணியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சிராஜ் மஸ்ஹூர், தலைமைத்துவசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.பளுலுள் ஹக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் இந்நிகழ்வின் போது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.










Read More