Featured Home (TOP)

Recent Comments

Monday, November 2, 2015

avathani Media Network

வடக்கு முஸ்லி்ம் விவகாரம் - உண்மையான தோற்றப்பாடும் தேவைப்பாடும்

(அ.ஸ்மின்-)
வடக்கு முஸ்­லிம்கள்; இன்­றைய திக­தியில் அதிகம் பேசப்­ப­டு­கின்ற விடயம். அது குரு­டர்கள் தரி­சித்த யானை­யாக இருந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக ஒரு சில விட­யங்­களை மிக­வுமே வெளிப்­ப­டை­யாக எடுத்­து­ரைக்க முனை­கின்றேன்.


வடக்கு முஸ்­லிம்­களின் விவ­கா­ரத்தை முழு­மை­யாக அறிந்­து­கொள்­வ­தற்­கான ஒரு முயற்­சி­யாக மாத்­தி­ரமே இதனை நோக்­க­வேண்டும், மாற்­ற­மாக தனிப்­பட்ட ரீதி­யான விமர்­ச­ன­மாக இதனை எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டாது என இப்­பத்­தியின் ஆரம்­பத்­தி­லேயே தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.


1990 ஒக்­டோபர் 30ம் நாள் யாழ்ப்­பா­ணத்தில் இருந்து முஸ்­லிம்­களை 2 மணித்­தி­யா­லயக்கெடுவோடு ஆயுத முனையில் வெளி­யேற்­றி­ய­தோடு வடக்கு மாகா­ணத்தில் “முஸ்லிம் இனச்­சுத்­தி­க­ரிப்பை” மிகவும் வெற்­றி­க­ர­மாக தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு நிறை­வேற்­றி­யது. 1990 ஒக்­டோபர் 12ம் திகதி சாவ­கச்­சே­ரியில் வாழ்ந்த முஸ்­லிம்­களை 1வார காலத்­திற்குள் வெளி­யே­று­மாறு அறி­வித்­த­மை­யோடு இவர்­களின் வடக்கு முஸ்­லிம்­களின் இனச்­சுத்­தி­க­ரிப்பு செயற்­பா­டுகள் தொடக்கம் பெற்­றன.



கிளி­நொச்சி, நாச்­சுக்­குடா, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னி­யாவின் எல்­லைக்­கி­ரா­மங்கள் என நீண்டு இறு­தி­யாக யாழ்ப்­பா­ணத்தில் இனச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்கை நிறை­வுக்கு வரு­கின்­றது. எனவே இது ஒரு திட்­ட­மி­டப்­பட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு (Planned and sponsored Ethnic Cleansing) என்­பது எவ்­வித வாதப் பிர­தி­வா­தங்­க­ளு­மின்றி  முழு உல­காலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­ய­மாகும்.



இவ்­வாறு இனச்­சுத்­தி­க­ரிப்­புக்­குள்­ளான வடக்கு முஸ்லிம் சமூகம் இலங்­கையின் பல்­வேறு திக்­குத்­தி­சை­க­ளிலும் தஞ்சம் பெற்­றார்கள். இத்­த­கைய வெளி­யேற்­றமே அவர்­க­ளது ஒட்­டு­மொத்த வாழ்­வி­யலை புரட்­டிப்­போட்­டது. குடும்பம் என்­கின்ற மிகச்­சி­றிய நிறு­வனம் தொடங்கி, சமூகம் என்­கின்ற மிகப்­பெ­ரிய நிறு­வனம் வரை அனைத்தும் ஆட்டம் கண்­டன.



எனவே வெளி­யேற்­றத்தை தொடர்ந்து உட­ன­டி­யாக சுதா­க­ரித்­துக்­கொண்டு தன்­னு­டைய அடுத்­த­கட்ட நகர்வை மேற்­கொள்ளத் திரா­ணி­யற்ற சமூ­க­மாக வடக்கு முஸ்­லிம்கள் மாறி­னார்கள். 1990-/1994 வரை எவ்­வித அசை­வாட்­டமும் இல்­லாத சமூ­க­மா­கவே வடக்கு முஸ்­லிம்கள் காணப்­பட்­டார்கள். 



1994களில் வடக்கு முஸ்­லிம்­க­ளி­டத்தில் இரண்டு முக்­கிய விட­யங்கள் நிகழ்ந்­தே­றின. ஒன்று வடக்கு முஸ்­லிம்­களை மையப்­ப­டுத்­திய வடக்கு முஸ்­லிம்­களின் முயற்­சி­யினால் சமூக அமைப்­புகள் தோற்றம் பெற்­றன.



இரண்­டா­வது சிறீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் இரண்டு மக்கள் பிர­தி­நி­தி­களை வடக்கு மக்கள் யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லி­ருந்தும், வன்னி மாவட்­டத்­தி­லி­ருந்தும் பாரா­ளு­மன்றம் அனுப்­பி­வைத்­தனர்.



உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் (IDP)  என்ற நிலையில் இலங்கை அர­சாங்­கமும், வெளி­நாட்டு நிறு­வ­னங்­களும் எமது மக்­களை கையாண்­டனர். ஆனால் இடம்­பெ­யர்ந்த வடக்கு மக்­க­ளுக்­கான தீர்வு விட­யத்தில் எவ்­வி­த­மான உறு­தி­யான நிலைப்­பா­டு­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு எவ­ருமே முன்­வ­ர­வில்லை. “தமது சொந்த தாயக மண்ணில் மீள்­கு­டி­யேற்­றமே வடக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான அடிப்­படைத் தீர்வு” என்று எவ­ருமே துணிந்து சொல்­வ­தற்கு அப்­போ­தைய சூழலில் முன்­வ­ர­வில்லை. அவர்கள் இடம்­பெ­யர்ந்து வாழ்ந்த இடங்­களில் அவர்­க­ளது வாழ்­வியல் தேவை­களை நிவர்த்­திக்க பலரும் முனைந்­தார்­களே தவிர அவர்­க­ளுக்­கான நிரந்­தரத் தீர்வை அடை­யாளம் செய்­வ­தற்கோ அல்­லது அத்­த­கைய தீர்வை மக்கள் மயப்­ப­டுத்தி அவர்­களை வழி­ந­டாத்­தவோ எவ­ருமே முன்­வ­ர­வில்லை.



2002ம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளுக்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கூட வடக்கு முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் குறித்து எவ்­வித குறிப்­பு­க­ளையும் காண­மு­டி­யாது.



அதே ஆண்டில் இடம்­பெற்ற ஹக்கீம் பிரபா உடன்­ப­டிக்­கையில் கூட “வடக்கில் இருந்து வெளி­யே­றிய முஸ்­லிம்கள் மீளக்­கு­டி­யேற முடியும்” என்ற வெற்று வாசகம் மட்­டுமே காணப்­பட்­டது.



இவ்­வா­றாக வடக்கு முஸ்­லிம்­களின் விவ­காரம் எல்லாத் தரப்­பு­க­ளி­னாலும் கைவி­டப்­பட்­ட­வி­ட­ய­மா­கவே அன்­றைய திக­தியில் காணப்­பட்­டது. 



வடக்கு முஸ்­லிம்­களை வைத்து அர­சியல் செய்ய முடிந்­த­வர்கள் தமது அர­சி­யலை மிகக் கச்­சி­த­மாக செய்­து­கொண்­டார்கள், வடக்கு முஸ்­லிம்­களின் அகதி நிலை­களை வைத்து வெளி­நாட்டு உத­வி­களைத் தரு­வித்­துக்­கொள்ள முடி­யு­மா­ன­வர்கள் அதனை செய்து முடித்­தார்கள்.



இப்­ப­டி­யாக வடக்கு முஸ்­லிம்­களின் விவ­காரம் அவ­ர­வ­ரது தேவை­க­ளுக்கு ஏற்ப கையா­ளப்­பட்­டதே தவிர ஒரு பொது உடன்­பாட்டில், பொது நோக்கை அடை­யாளம் செய்து அதற்­கேற்­றாற்­போல முன்­ன­கர்த்­தப்­ப­ட­வில்லை.



இவ்­வா­றான நிலை 1990 முதல் 2009 யுத்த நிறைவு வரைக்கும் நீண்டு வந்­தி­ருக்­கின்­றது.



ஒவ்­வொரு வரு­டமும் ஒக்­டோபர் வரு­கின்­ற­போது வடக்கு முஸ்­லிம்­களின் பல­வந்த வெளி­யேற்றம் ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறும்; விடு­த­லைப்­பு­லி­களை வசை­பா­டு­வ­தற்­கான, தமிழ் அர­சியல் வாதி­களின் மீது விமர்­சனக் கணை­களைத் தொடுப்­ப­தற்­கான, இன­வா­தத்தை உரத்த தொனியில் பேசு­வ­தற்­கான, அர­சாங்­கத்தைச் சாடு­வ­தற்­கான, வடக்கு முஸ்­லிம்­களை வைத்துப் படம் காட்­டு­வ­தற்­கான, ஒரு நல்ல சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­தி­ருக்­கின்­றதே தவிர வடக்கு முஸ்­லிம்­களின் வாழ்வில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இது அமைந்­தி­ருக்­க­வில்லை. என்ற ஆதங்­கத்தை வடக்கு முஸ்­லிம்கள் பல­ரி­டத்­திலும் எம்மால் காண­மு­டியும்.



1990களில் பல­வந்­த­மான வெளி­யேற்­றமும் மக்கள் வெளி­யேறிச் செல்­வ­தற்குத் தயா­ரில்­லாத நிலையில் ஏற்­பட்­ட­தைப்­போல, 2009களில் மீளக்­கு­டி­யேற்­றத்­திற்­கான சந்­தர்ப்­பமும் எமது மக்கள் மீள்­கு­டி­யேற்­றத்­திற்குத் தயா­ரில்­லாத சூழ­லில்தான் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.



1990 முதல் 2009 வரை வடக்கு முஸ்­லிம்கள் எவ்­வாறு கையா­ளப்­பட்­டார்கள் என்­பதை மேலே நோக்­கினோம். அதே பல­வீ­னங்­களைச் சுமந்­த­வர்­க­ளா­கவே 2009களின் பின்­னரும் வடக்கு முஸ்­லிம்கள் பய­ணப்­பட்­டார்கள்.



2009களின் பின்னர் ஏற்­பட்ட யுத்­த­மற்ற சூழ்­நி­லையில் மீளக்­கு­டி­யே­று­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டது. மஹிந்த அர­சாங்கம் வடக்­கிலே ஒரு சுமூ­க­மான சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது என்­பதை உல­கிற்கு எடுத்­து­ரைக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டது.



அதன்­பி­ர­காரம் 2009 ஆகஸ்ட் மாதத்தில் இடம்­பெற்ற வடக்கு மாகா­ணத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலைக் குறிப்­பிட முடியும், குறித்த தேர்­தலில் மஹிந்த அரசு தனக்குச் சாத­க­மான ஒரு பதிலை எதிர்­பார்த்து தேர்­தலில் கள­மி­றங்­கி­யது.



இத்­தேர்­தலில் வடக்கின் தமிழ் சமூகம் முழு­மை­யான பங்­கு­பற்­றலை மேற்­கொள்ள எவ்­வி­த­மான வாய்ப்பும் இல்­லாத நிலையில் முஸ்­லிம்கள் இத்­தேர்­தலை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள். யாழ்ப்­பாணம் மாந­கர சபையில் 5 முஸ்லிம் உறுப்­பு­ரி­மை­யினைப் பெற்­றுக்­கொள்ளும் அள­விற்கு முஸ்­லிம்­க­ளுக்­கான அர­சியல் வாய்ப்பு அதி­க­ரித்­தி­ருந்­தது.



முசலி பிர­தேச சபை முற்­றாக முஸ்­லிம்­களின் சபை­யாக மாறி­யது, மீளக்­கு­டி­யேற்றம் நடை­பெ­று­வ­தற்கு முன்­னமே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் மக்கள் பிர­தி­நி­தி­களைப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டது.



இத்­த­கைய அர­சியல் வாய்ப்­பு­களை வைத்­துக்­கொண்டு மீள்­கு­டி­யேற்­றத்தை நோக்கி வடக்கு முஸ்­லிம்கள் பய­ணித்­தார்கள்.



2009/-2015 இற்­றை­வ­ரை­யான காலத்தில் வடக்கில் இடம்­பெற்ற முஸ்லிம் மீள்­கு­டி­யேற்­றங்கள் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட திட்­ட­மி­ட­லுடன் கூடி­யன அல்ல, மாறாக தன்­னார்­வ­மாக இடம்­பெற்­ற­வையே, எனவே மீள்­கு­டி­யேற்றம் சவால்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­தை­வி­டவும் சாத்­தி­ய­மற்­றுப்­போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது என்­ப­துதான் யதார்த்­த­மாகும்.



எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்ற நடை­மு­றை­களை எடுத்து நோக்­கினால், வடக்கின் ஒவ்­வொரு முஸ்லிம் கிரா­மமும் தன்­னு­டைய மீள்­கு­டி­யேற்றம் குறித்து ஒரே­வ­கை­யான மனோ­நி­லை­யினைக் கொண்­டி­ருக்­க­வில்லை.



மாறாக இப்­போது தாம் தங்­கி­யி­ருக்­கின்ற பிர­தே­சங்­களில் குடி­யி­ருந்­த­வண்ணம், மீள்­கு­டி­யேற்­றத்தை சிந்­தித்­தார்கள், எத்­தனை குடும்­பங்கள் மீளக்­கு­டி­யே­றப்­போ­கின்றோம், அவர்­க­ளுக்குத் தேவை­யான காணிகள் எவ்­வ­ளவு, வீட்­டுத்­திட்­டத்­திற்­கான ஏற்­பா­டுகள் என்ன, வாழ்­வா­தா­ரத்தை எவ்­வாறு ஒழுங்­க­மைக்கப் போகின்றோம், கல்வி, சுகா­தார நிலை­களை எவ்­வாறு ஒழுங்­க­மைப்­பது, உட்­கட்­ட­மைப்பு விட­யங்­களை எவ்­வாறு சீர­மைப்­பது, சமூக அமைப்­பு­களை நிறு­வ­னங்­களை எவ்­வாறு ஒழுங்­க­மைப்­பது போன்ற விட­யங்கள் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­னமே ஒரு அமர்வில் மீள்­கு­டி­யே­று­கின்ற மக்­களின் பங்­க­ளிப்­போடு இடம்­பெ­ற­வில்லை, அல்­லது மிகச் சொற்­ப­மாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.



இதுவே மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு போதிய தயார் நிலை­யற்­ற­வர்­க­ளாக எமது மக்­களை மாற்­றி­ய­மைத்­தி­ருக்­கின்­றது.



மீள்­கு­டி­யேற்றம் குறித்த அரச நடை­மு­றைகள் குறித்தும் எமது மக்கள் மத்­தியில் போதிய விளக்­கங்கள் கிடை­யாது, அத்­தோடு எமது மக்­களின் மீள்­கு­டி­யேற்றத் தேவை­க­ளுக்கு ஏற்­ப அரச மீள்­கு­டி­யேற்ற நடை­மு­றைகள் மறு­சீ­ர­மைக்­கப்­ப­ட­வில்லை. சாதா­ரண அரச நடை­மு­றை­களின் படி மீள்­கு­டி­யேற்ற செயற்­திட்­ட­மா­னது பின்­வரும் ஒழுங்கில் இடம்­பெ­று­கின்­றது.



மீள்­கு­டி­யே­று­கின்ற நபர், அல்­லது குடும்பம் தனது மீள்­கு­டி­யேற்­றத்தை, தான் மீளக்­கு­டி­யே­றிய பிர­தே­சத்தின் கிராம சேவை­யா­ள­ருக்கு எழுத்து மூலம் தெரி­யப்­ப­டுத்த வேண்டும், அதனை பிர­தேச செய­லா­ள­ரிடம் பதிவு செய்து அவர்­க­ளுக்­கான குடும்ப பதி­வினை கிராம உத்­தி­யோ­கத்தர் உறுதி செய்தல் வேண்டும், மீளக்­கு­டி­யே­றி­ய­வ­ருக்கு மீளக்­கு­டி­யே­றிய பிர­தே­சத்தில் காணி இருப்பின் அதில் தற்­கா­லிக வீட­மைப்பு, அல்­லது நிரந்­தர வீட­மைப்­புக்­கான உத­வி­களை வழங்க வேண்டும், அத்­தோடு மீளக்­கு­டி­யே­றி­ய­வர்­க­ளுக்­கான உலர் உணவு உதவித் திட்டம், தற்­கா­லிக இருப்­பி­டங்­களை அமைப்­ப­தற்­கான உத­வித்­திட்டம், வாழ்­வா­தார உத­வித்­திட்டம் போன்ற உத­வி­களை அரசு மீளக்­கு­டி­யே­றி­ய­வர்­க­ளுக்கு வழங்­கவேண்டும்.



காணிகள் இல்­லாத குடும்­பங்­க­ளுக்கு தம்­மு­டைய பிர­தேச செய­லக எல்­லைக்குள் இருக்கும் அரச காணி­களைப் பகிர்ந்­த­ளிப்­பதும் பிர­தேச செய­லரின் பொறுப்­பா­கவே காணப்­பட்­டது.



ஆனால் இந்த நடை­மு­றைகள் வடக்கு முஸ்­லிம்கள் விட­யத்தில் முழு­மை­யாக செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 



இதற்கு இரண்டு கார­ணங்கள் சொல்­லப்­ப­டு­கின்­றன; ஒன்று வடக்கு முஸ்­லிம்கள் தம்மை இத்­த­கைய அரச நடை­மு­றை­க­ளுக்குள் சீராக உள்­வாங்­கிக்­கொள்­ள­வில்லை என்றும், அதி­கா­ரிகள் முஸ்­லிம்­களின் விட­யத்தில் பக்­கச்­சார்­பா­கவும், இனத்­து­வ­ரீ­தி­யான பாகு­பா­டு­க­ளு­டனும் நடந்­து­கொண்­டார்கள் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவை இரண்டு கார­ணி­க­ளையும் முற்று முழு­தாக புறக்­க­ணித்­து­விட முடி­யாது. இந்தச் சந்­தர்ப்­பத்தில் வடக்கு முஸ்­லிம்­க­ளிடம் அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள ஒரு அமைச்சர் இருந்தார், ஆளும்­த­ரப்பின் இரண்டு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வங்கள் இருந்­தன, உள்­ளூ­ராட்சி மன்றப் பிர­தி­நி­தித்­து­வங்கள் இருந்­தன. ஆனாலும் இத்­த­கைய பிர­தி­நி­தித்­து­வங்கள் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை திட்­ட­மி­டு­வ­திலும், சீர­மைப்­ப­திலும் ஒழுங்­க­மைப்­ப­திலும் தங்­க­ளு­டைய பங்­க­ளிப்பைச் செலுத்­தி­யி­ருக்­கின்­றார்­களா என்­பது கேள்­விக்­கு­றிதான்.



2013 செப்­டம்பர்; முதன் முறை­யாக வடக்கு மாகா­ண­சபைத் தேர்தல் இடம்­பெ­று­கின்­றது. வடக்கு முஸ்­லிம்கள் தங்­க­ளு­டைய வாக்­குப்­ப­லத்­தினால் மூன்று மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­தார்கள்.



தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஒரு தேசி­யப்­பட்­டியல் ஆச­ன­மொன்­றினை முஸ்லிம் பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ருக்கு வழங்­கி­யது, எல்­லா­மாக 4 முஸ்லிம் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை அமைந்­தி­ருக்­கின்ற வடக்கு மாகா­ண­ச­பையில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இருந்­த­போ­திலும் வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் இன்­னமும் சீர­மைக்­கப்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றது.



2009-/2015வரை­யான காலப்­ப­கு­தியில் வடக்கு முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் எதிர்­கொண்ட சவால்­க­ளையும் எடுத்து நோக்­கு­வது மீள்­கு­டி­யேற்­றத்தின் உண்­மை­யான தன்­மையை அறிந்­து­கொள்­வ­தற்கு துணை நிற்கும்.



• மன்னார் உப்­புக்­குளம் பிர­தே­சத்தின் காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பி­லான நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்­புத்­தெ­ரி­வித்து மன்னார் நீதி­மன்றம் தாக்­கப்­பட்டு இறு­தி­யாக அதோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் பகி­ரங்க மன்­னிப்­புக்­கோ­ர­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது, ஆனால் மன்னார் உப்­புக்­குளம் காணி விவ­கா­ரத்­திற்குத் தீர்வு கிடைக்­க­வில்லை.



• மன்னார் உவரி, ஓலைத்­தொ­டுவாய் பிர­தே­சத்தில் பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான 3000 ஏக்­க­ருக்கும் அதி­க­மான காணி­களை காத்­தான்­கு­டியில் இயங்கும் அரபுக் கலா­சா­லை­யொன்றின் பெயரில் அத்­து­மீறி அப­க­ரித்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டு நீதி­மன்றில் சுமத்­தப்­பட்டு இன்­று­வரை நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­கின்­றன.



• மன்னார், நானாட்டான் பூவரசந்தீவு, பொன்தீவுக் கண்டல் காணியில் முஸ்லிம்களும், கிறிஸ்த்தவ சமூகத்தவர்களும் உரிமை கோரி முரண்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாணத்தின் ஆளும் தரப்பினரின் தலையீட்டால் இரு சமூகங்களுக்கு மத்தியிலும் சுமுகமாக காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.



• வவுனியா இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற போராட்டத்தை தமிழ் அரசியல் வாதிகள் முன்வைத்த சந்தர்ப்பத்திலும், முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டப் பகிர்வுகள் நடந்தேறின.



• முல்­லைத்­தீவில் முஸ்­லிம்­க­ளுக்­கான காணி பகிர்ந்­த­ளிப்பில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒரு சில மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் இவ்­வி­ட­யத்தை பெரி­து­ப­டுத்த முற்­பட்­டாலும் பொது­வான அரச நடை­மு­றைகள் பின்­பற்­றப்­பட்டு காணிகள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற உத்­த­ர­வாத்தை தமிழ் அர­சியல் தலை­வர்கள் முன்­வைத்­தி­ருக்­கின்­றார்கள்



• வில்­பத்­தினை அண்­டிய மறிச்­சுக்­கட்­டியில் முஸ்­லிம்கள் அத்­து­மீறி காணி­களை அப­க­ரிக்­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­த­போ­திலும் அப்­பி­ர­தே­சங்­களில் அவ்­வா­றான அத்­து­மீ­றிய காணி அப­க­ரிப்­புகள் இடம்­பெ­ற­வில்லை என்று விலங்­குகள் சர­ணா­லயத் திணைக்­களம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.



• யாழ்ப்­பா­ணத்தில் 317 முஸ்லிம் குடும்­பங்கள் இந்­திய வீட்­டுத்­திட்­டத்­திற்­காக விண்­ணப்­பித்­தி­ருந்தும் 44 முஸ்லிம் குடும்­பங்கள் மாத்­தி­ரமே பய­னா­ளி­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள், இதனை யாழ்ப்­பாணம் பிர­தேச செய­லரின் இன­ரீ­தி­யான பார­பட்­சத்தின் வெளிப்­பா­டா­கவே யாழ்ப்­பாண முஸ்­லிம்கள் கரு­து­கின்­றார்கள்.



• இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­புக்கு உட்­பட்­டுள்ள பிர­தே­சங்­க­ளாக மறிச்­சுக்­கட்­டியின் ஒரு பகுதி, சிலா­வத்­துறை, மன்னார் பெரி­ய­மடு பிர­தே­சத்தின் மேச்சல் தர­வைகள், விவ­சாய நிலங்கள் என்­ப­வற்றை குறிப்­பிட முடியும்.



இவை தவிர ஆங்­காங்கே ஒரு சில சிறிய அள­வி­லான சவால்­க­ளையும் எம்மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. இத்­த­கைய சவால்கள், தடைகள் ஏன் ஏற்­ப­டு­கின்­றன என எம்­மிடம் நீண்­ட­கா­லமாக ஒரு கேள்வி எழு­கின்­றது. இத்­த­கைய விவ­கா­ரங்­களை கையாள முற்­ப­டு­கின்­ற­போது கிடைக்­கின்ற தக­வல்கள் நான் முன்னர் குறிப்­பிட்­டது போல உரிய அரச நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, பய­னா­ளிகள் குறித்து விப­ரங்கள் தரப்­ப­டு­வ­தில்லை, மீள்­கு­டி­யேற்­றத்­தோடு தொடர்­பில்லா வெளி­மா­வட்ட மக்­களே இத்­த­கைய விட­யங்­களைக் கையாள்­கின்­றனர், போன்ற கார­ணிகள் சொல்­லப்­படும், எம்­ம­வர்­களைக் கேட்டால் “இனத்­து­வே­ஷ­மாக நடக்­கின்­றார்கள்”, “பாகு­பாடு” காட்­டு­கின்­றார்கள் என்றும் பதில்­வரும். இதன் மூலம் மீண்டும் நாம் காண்­பது எம்­மு­டைய அர­சியல் பிர­தி­நி­தித்­து­வங்கள் வடக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைக் கையாள்­வ­தற்கு தவ­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­ப­தே­யாகும்.



இப்­போது நாம் எத்­த­கைய தீர்வை நோக்கி நக­ர­வேண்டும் என்ற கேள்வி எம் முன்னால் எழு­கின்­றது. வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் “மக்­களின் தேவை” யாக மாறா­த­வரை, அல்­லது “மக்கள் மயப்­ப­டுத்­தாத” வரை வெற்­றி­ய­டை­யாது.



மீள்­கு­டி­யே­று­கின்ற மக்கள் தாமா­கவே மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­வ­ர­வேண்டும். வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஒட்­டு­மொத்த மக்­களும் மீளவும் வடக்கில் குடி­யேற மாட்­டார்கள், ஆனால் கணி­ச­மான தொகை­யினர் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு முன்­வ­ரு­வார்கள். ஆனால் முதற்­கட்­ட­மாக மீள்­கு­டி­யேற்­றத்தின் அவ­சியம், தேவை, முக்­கி­யத்­துவம், வாய்ப்­புகள், சவால்கள், நடை­மு­றைகள் குறித்து மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்­டு­வது பிர­தான கட­மை­யாகும்.



வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தைக் கையாள்­வ­தற்கு ஒரு கூட்­டுப்­பொ­றி­முறை அவ­சியம், சமூ­கத்­த­லை­மைகள், அர­சியல் கட்­சிகள், சமூக நிறு­வ­னங்கள் இணைந்தே அத்­த­கைய ஒரு கூட்­டுப்­பொ­றி­மு­றை­யினை உரு­வாக்க முடியும், இது மிக அடிப்­ப­டை­யான விட­ய­மாகும். அதனைத் தொடர்ந்து பின்­வரும் விட­யங்கள் முதன்மை அடிப்­ப­டையில் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.



வடக்கு முஸ்­லிம்கள் அனை­வரும் 1990களில் தாம் வாழ்ந்த பிர­தே­சங்­களின் பள்­ளி­வா­யல்­களில் தம்மைப் பதிவு செய்து, தமது வடக்­கிற்­கான அடை­யா­ளத்தை உறு­தி­செய்தல் அவ­சி­ய­மாகும், பதி­வா­னது வடக்கு முஸ்­லிம்கள் குறித்த ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காகவேயன்றி வேறு தேவைகளுக்கானதல்ல, இதனை முஸ்லிம் கலாசார அமைச்சு தன்னுடைய பொறுப்பாக நிறைவேற்ற முடியும்.



ஒரு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பள்ளிவாயல்கள், அப்பிரதேசத்தின் அரசியல், சமூகத்தலைமைகளோடு இணைந்து குறித்த பிரதேசத்திற்கான மீள்குடியேற்ற திட்டமிடல் செயலமர்வினை நடாத்துதல் வேண்டும், அச்செயலமர்வில் குறித்த பிரதேசத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு இருக்கின்ற காணி, வீட்டுத் தேவைகள், பிரதேசத்தில்  அவர்களுக்கு இருக்கும் ஏனைய தேவைகளை அடையாளம் கண்டு பிரதேசத்திற்கான மீள்குடியேற்ற திட்டமிடல், மற்றும் நிகழ்ச்சி நிரலை ஏற்படுத்த முடியும். இத்தகைய பணியினை அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, சூறா கவுன்ஸில் போன்ற அமைப்புகள் முன்னின்று மேற்கொள்ள முடியும்.



மன்னாரில் 5 பிரதேச செயலகப் பிரிவுகளும், முல்லைத்தீவில் ஒரு பிரதேச செயலகப் பிரிவும், வவுனியாவில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளும், யாழ்ப்பாணத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளும், கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படவேண்டும்.



அத்தகைய திட்டமிடல்களின் அடிப்படையில் எம்மிடையே காணப்படுகின்ற அரசியல் பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்தி “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித்திட்டம்” என்னும் ஒரு செயற்திட்டத்தை அரச அங்கீகாரம் உள்ள ஒரு செயற்திட்டமாக உருவாக்கிக் கொள்ள முடியும். அத்திட்டத்திற்காக அரச நிதி, மற்றும் தனியார் நிதியினை உள்ளீர்த்துக்கொள்வத்ற்கான வாய்ப்பு ஏற்படும்.



தொழில்வாய்ப்பு, வீடமைப்பு, காணி, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சமூக நிறுவனங்கள், என்ற முன்னுரிமை  ரீதியில் வடக்கு முஸ்லிம்களுக்கான விவகாரங்களை ஒழுங்குபடுத்தி செயற்படுவோமாக இருந்தால் ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கணிசமான அடைவுகளை எம்மால் ஈட்டிக்கொள்ள முடியும்.



இத்தகைய ஒரு காத்திரமான செயற்திறன் மிக்க செயற்பாடொன்றினை நோக்கியே வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்கள் முன்னனகர்த்தப்படவேண்டும், மாறாக வெற்றுக்கோஷங்களுக்குப் பின்னால் அணிதிரள்வதும், நினைவு நாட்களை அனுஷ்டித்து முடிப்பதும் பயனற்றவை என்பதை மனதில்கொள்வோம்.
vidivelli.lk

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :