Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 3, 2015

avathani Media Network

திட்டங்கள் மேற்கொள்ளும்போது கிராமப்பகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களின் தேவைகளை கேட்டறியுங்கள் வளவாளர் திரு ரவிக்குமார்

(எம்.எச்.எம்.அன்வர்)

உத்தியோகத்தர்கள் திட்டங்களை அடையாளம் காணும்போது கிராமப்பகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு திட்டங்களை அமுல்ப்படுத்துங்கள்  இவ்வாறு இன்றைய தினம்(02.11.2015) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இடம்பெற்ற விளைவு சார் முகாமைத்துவம் (RBM) தொடர்பான பயிற்சிநெறியின்போது மேற்படி விடயத்திற்கு பொறுப்பான மாவட்ட செயலக வளவாளர் திரு ரவிக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 
நாம் குறிப்பிட்ட திட்டமொன்றினை கிராமிய மட்டத்திலிருந்து   தேர்ந்தெடுத்து அது நீடித்து நிலைத்திருக்ககூடிய திட்டமாகவும் மக்களுக்கு பயனுள்ள ஒரு திட்டமாகவும் இனங்கண்டு பிரதேச செயலகத்தினூடாக மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி தேசிய மட்டத்தில் அனுமதி பெற்று அத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் 
அத்துடன் குறிப்பிட்ட ஒரு இலக்கை வைத்து அது சாத்தியமா எந்த திட்டத்தினை முற்படுத்துவது அதற்கு எவ்வாறான வளங்கள் உள்ளது என்பதை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் அப்போதுதான் அத்திட்டம் நிலையான நீடித்து நிலைத்திருக்க கூடிய ஒரு திட்டமாக மாறும்.இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் திரு சிவராசா கணக்காளர் மற்றும் பிரதேச கல்விப்பணிப்பாளர் கிராம சேவை உத்தியோகத்தர்கள் திவிநெகும உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு திணைக்களத்திலிருந்தும்  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் 





avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :