(ஜுனைட்.எம்.பஹ்த்)
காலஞ்சென்ற கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரோ அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காத்தான்குடி மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா
சபை, மட்டக்களப்பு வர்த்தக சங்கம் ஆகியவற்றின் சார்பாக அதன் உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
கிழக்கில் இருந்து உலமாக்கள்,முஸ்லிம் தலைவர்கள்,பொது மக்கள் அஞ்சலி செலுத்த வந்தமை மாற்று மத சகோதரர்களிடம்
பெரும் வரவேற்பை யும் பாராட்டயும் பெற்றுள்ளது. இது போன்ற செயற்பாடுகள் எமது நாட்டின் இன,மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது..





