Featured Home (TOP)

Recent Comments

Friday, November 6, 2015

avathani Media Network

முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வை ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்டம் --படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்ளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வை ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும் விஷேட நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று 6 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு-கல்முனை ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட நிகழ்சித் திட்ட ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஆர்.எஸ்.கோனார,(யுனிசெப்) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட முகாமையாளர் எஸ்.ரவீந்திரன்;,மட்டக்களப்பு சர்வோதயத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி எஸ்.பத்மா ,திட்ட உத்தியோகத்தர் ரீ.மயூரன் உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள், மண்முனைப்பற்று- ஆரையம்பதி முச்சக்கர வண்டி சாரதிகள் சமூக நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆரையம்பதி முச்சக்கர வண்டி சாரதிகள் சமூக நலன்புரிச் சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்கள் போக்குவரத்து பொலிசாரினாரினால் ஒட்டப்பட்டது.
இங்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் குறித்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேற்படி முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டப்பட்ட வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிகர்களில் வீதிச்சமிஞ்சைகளை மதித்து நடக்கும் சாரதிகளை பாராட்டுகின்றோம்,வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்,சாரதிகளே அதிக வேகம் வாழ்வின் ஆனந்தங்களை இல்லாது செய்துவிடும்,சாரதிகளே உங்களின் கவனமின்மை ஊரவரின் உயிரைக் குடிக்கும் போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :