Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 5, 2015

avathani Media Network

ஊத்துச்சேனைக் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லைக் கிராமமான ஊத்துச்சேனைக் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
குறித்த கிராம மக்கள் நித்திரையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த யானைகள் வீடுகளை உடைத்து அங்கிருந்த நெல் மூடைகள் மற்றும் அரிசி போன்றவற்றை உணவாக உட்கொண்டும் தென்னை மரங்கள், மா, கொய்யா மரங்களை அழித்து துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
க.சந்திரசேகரன், மு.ஞானமுத்து, க.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர்களது வீடுகள் உடைக்கப்பட்டு நெல்களை உணவாக உட்கொண்டுள்ளதாகவும் மற்றும் சி.குணராசாவின் வளவினுள் புகுந்து தோட்டப்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை துவம்சம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர். யானைகளின் இவ் அட்டகாசம் தற்போது பெரும்போகச் நெல்செய்கை காலமாக இருப்பதனாலும் பருவ மழைக் காலமாக இருப்பதனால் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு இவற்றினை விரட்டுவதற்கு யானைகளை துரத்தும் வெடிகளோ மற்றும் யானைக்கான எல்லை வேலிகளோ அமைக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இரவினையும் அச்சத்துடனும் தூக்கமில்லாமலும் தங்களது பிள்ளைகளை காப்பாற்றும் முகமாக மிகவும் துன்பப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதற்கு கிரான் பிரதேச செயலாளர் வன ஜீவராசிகள் அதிகாரிகள் அழைத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறித்த பிரதேச வாசிகள் கேட்கின்றனர்.




avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :