Featured Home (TOP)

Recent Comments

Thursday, November 12, 2015

avathani Media Network

சோபித தேரர்

(காத்தான்குடி நிஷவ்ஸ்)

அதிகார வெறிகொண்ட
சதிகாரக் குழுவுக்கு
எதிராகப் போராடி
உதிராத புகழ் கொண்டோன்
தொப்பித் தலமைகள்
தப்ப வழி தேட,
தப்புக்கெதிராய்
சிப்பாய் போல் நின்றவன்
காவி உடை கொண்ட
பாவிகளுக்கெதிராய்
ஆவி நீங்கும் வரை
மாவீரனாய் வாழ்ந்தவன்.
ஆட்சி பிரள
சாட்சியாய் நின்றவன்
காட்சியை மாற்றியவன்
கட்சியை சாராதவன்
புதிய ஆட்சி இங்கு
உதயம் ஆன பின்னும்
பதவியோ உதவியோ
எதுவும் கேட்காதவன்.
இந்த மண்ணிலே
அந்த மனிதரின்
சுந்தர நினைவுகள்
எந்நாளும் உயிர் வாழும்
(காத்தான்குடி நிஷவ்ஸ் -12/11/2015)

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :