Featured Home (TOP)

Recent Comments

Friday, November 6, 2015

avathani Media Network

புதிய உள்ளூராட்சி வட்டாரப் பிரிப்பு முறை குறித்த NFGG யின் அறிவித்தல்

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான புதிய வட்டார எல்லைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இதன்படி உள்ளூராட்சித் தேர்தல்கள் குறித்த வட்டார முறைப்படியே இடம்பெறும் எனவும் அரசு அறிவித்திருக்கின்றது. மேற்படி வட்டாரங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று முதல் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியே ஒரு வட்டார எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. அவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகின்ற வட்டாரத்தினுள் 1500-5000 வரையான மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் ஒற்றை, இரட்டைப் பிரதிநிதித்துவங்கள் அல்லது பல பிரதிநிதித்துவங்கள் தீர்மானிக்கபடுகின்றன, எனவே மேற்படி வட்டாரப் பிரிப்பு முறைகள், பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டு முறைகள் குறித்து மக்கள் தமது முறைப்பாடுகளை, அபிப்பராயங்களை முன்வைக்கும் சந்தர்ப்பம் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது.
எனவே மிக அடிப்படையாக தங்களுடைய வட்டார எல்லைகளை மக்கள் தெரிந்துகொள்தல் அவசியமாகும். அவ்வெல்லைக்குள் 1500-5000 வாக்காளர்கள் இருக்கின்றார்களா அல்லது கூடுதலாக இருக்கின்றார்களா என்பதை அறிந்து தங்களது வட்டாரத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவங்கள் சரியானதா என்பதையும் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை எழுத்து மூலம் பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
Ministry of Provincial Councils & Local Government, No:330, Dr.Colvin R deSilva Mawatha (Union Place), Colombo -02.
அதன் பிரதியொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் வழங்க முடியும், அதன் மூலம் வட்டாரப் பிரிப்பு முறைமையில் நிலவும் குறைபாடுகளை எம்மால் நிவர்த்திக்க ஆவண செய்ய முடியும்.

வட்டாரப் பிரிப்பு முறை தொடர்பிலான விபரங்களை 1928/2 இலக்க 2015 ஆகஸ்ட் 21ம் திகதிய வர்த்தமானியிலும், பின்வரும் இணையத்தளத்திலும் http://www.lgpc.gov.lk (http://www.lgpc.gov.lk/eng/?page_id=1574) பெற்றுக்கொள்ள முடியும். நல்லாட்சிகான தேசிய முன்னணிக்கு அனுப்பப்படுகின்ற முறைப்பாடுகளை ஒழுங்குபடுத்தி அவற்றை உள்ளூராட்சி அமைச்சிடம் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.
எனவே உங்களது முறைப்பாடுகளை அவதானங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும், NFGG, 100/1, Sri Saranangara Road, Kalubovila, Dehiwela அத்தோடு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையானவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0770525391, 0773868126 தொடர்புகொள்ளவும் முடியும்.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :