அவசர விபத்துக்களால் 219 பேர் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்திற்கமைவாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்ஹ கூறினார்.
வீதி விபத்துக்கள் காரணமாக 48 பேரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 12 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு கொளுத்தியதால் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் இதுவரை பதிவாகவில்லை என வைத்தியர் அனில் ஜாசிங்ஹ கூறினார்.
