இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை எவ்வித காரணமும் கொண்டு விடு முறை எடுக்க முடியாது என இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்ளை மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கும், அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் தங்களால் இயலுமானளவு போக்குவரத்துச் சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் ரமால் சிறிவர்தன குறிப்பிட்டார்.
