(அமான்)
இன்றைய திகதியில் காத்தான்குடியில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற இரண்டு விடயங்கள்.
1 பதுரியா எயார் லைன்ஸ்
2 ஜம்இயத்துல் உலமா எழுதிய கடிதம்
பதுரியா எயார் லைன்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தியாவிலிருந்து எதிர்வரும் 01.01.2016 வெள்ளிக்கிமை காத்தான்குடிக்கு வருகை தரவிருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத்தின் பிரச்சாரகர் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் மேற்படி வருகையினையும், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தினையும் இரத்துச் செய்யக் கோரி காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா ஒரு கடிதத்தினை காத்தான்குடி நகரசபைச் செயலாளருக்கு அனுப்பியிருந்தது. மேற்படி கடிதம் தொடர்பில் தௌஹீத் ஜமாஅத் ஆதரவாளன் என்ற அடிப்படையில் எனது சில அவதானங்கள்.
1 காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவில் அங்கம் வகிக்கின்ற சில உலமாக்கள் இன்றும் மௌலவி அப்துர் றஊபின் பள்ளியுடன் நெருங்கிய உறவினைப் பேணி வருகின்றார்கள். இது தொடர்பில் அவர்களால் ஜம்இயத்துல் உலமாவிற்கு கொடுக்கப்பட்ட விளக்கக் கடிதத்திற்கு இது வரை ஜம்இயத்துல் உலமா பதில் விளக்கம் அளித்ததாகத் தெரியவில்லை.
2 அப்துர் றஊப் மௌலவியின் கருத்துத்; தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாஅத் சுமார் இதுவரை 34 DVD க்கள் மூலம் மறுப்புத் தெரிவித்தும் இது தொடர்பில் தௌஹீத் ஜமாஅத்தின் கருத்துக்கள் சரியா அல்லது பிழையா என்பது பற்றி பொது மக்களுக்கு தனது நிலைப்பாட்டினை இது வரை நீங்கள் தெரிவிக்கவில்லை.
3 தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இலங்கைக்கு வருகை தரவிருந்த சகோதரர் PJ அவர்களையும் இதே வழிமுறையில்தான் உங்களுடைய தலைமையகம் (அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா) தடுத்திருந்தது. இப்போது சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக நாட்டுக்கும் நமதூருக்கும் வரவிருக்கும் ஜமாலி அவர்களையும் தடுக்கிறீர்கள். அப்படியானால் உங்களுடைய கொள்கையும் நிலைப்பாடும் என்ன..?
4 ஒருவருடைய கருத்தை சொல்விடாமல் தடுப்பதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலுள்ள ஆதாரம் என்ன..?
5 மீலாத் விழா சம்மந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன..? சரி என்றால் இந்த நிகழ்வை ஏன் நீங்கள் தடுக்க முனைய வேண்டும். பிழையென்றால் பாடசாலை மட்டங்களிலும் இன்ன பிற அமைப்புக்களாலும் கொண்டாடப்படும் மீலாத் விழாக்களை தடுக்க முன்வருவீர்களா..?
6 ஜமாலி வருவது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்றால் தேசிய தௌஹீத் ஜமாஅத் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இதே ஜமாலி காத்தான்குடிக்கு வருகை தந்தபோது மட்டக்களப்பில் ஒரு விவாத அரங்கையே அவருடன் சந்தித்தது. அப்போது வேடிக்கை மாத்திரம் பார்த்த நீங்கள் இப்போது குந்தக விளக்கம் சொல்வது ஏன்...?
இவ்வாறு வினாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்
எனவே, மேற்படி உங்கள் கடிதம் கொள்கை சார்ந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இதைவிட பலமான முட்டுக்கட்டைகளை போட்டிருக்கின்றீர்கள். அதேநேரம் தௌஹீத் ஜமாஅத்தினை எதிர்க்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மாறுபட்ட கருத்து வேறு பாடு உள்ளவர்களுடன் இணைந்தும் செயற்பட்டுள்ளீர்கள்.
எனவே,
மேற்படி உங்கள் நகரசபைக்கடிதம் தொடர்பான உங்கள் உள்நோக்கம் என நான் கருதுவது..
அன்றைய தினம் தேசிய தௌஹீத் ஜமாஅத்தினாலும் குட்வின் சந்தியில் 'மீலாத் ஒழிப்பு மாநாடு' என்று ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை நன்கு அறிந்து கொண்ட நீங்கள் மேற்படி சுன்னத் வல்ஜமாஅத்தின் நிகழ்வை தடை செய்யும் போது காவல் துறையினால் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் நிகழ்வும் தடை செய்யப்படும் என்ற நோக்கில்தான் இக்கடிதம் வரைப்பட்டிருக்க வேண்டும்.
இல்லையென்று சொன்னால் 'முஃமின்கள் எல்லோருடைய கருத்தினையும் கேட்பார்கள்.சரியானதை மாத்திரம் பின்பற்றுவார்கள்' என்ற இறைவனின் வாக்கு உலமாக்களாகிய உங்களுக்கு தெரியமலிருக்க நியாயமில்லை .
