Featured Home (TOP)

Recent Comments

Thursday, December 24, 2015

avathani Media Network

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு பொறியலாளர் நபீரின் பகிரங்க சவால் !!!!!

கடந்த பொதுத்தேர்தலில் தனித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சொந்த சின்னமான மயிலில் களமிறங்கிய நீங்கள் சகோதாரர் அமீர்,நௌசாத் ஆகியோரின் மௌனம் காப்பின் மூலமும் இறக்காமம் பிரதேச வேட்பாளரினதும்,நாவிதன்வெளி,இஸ்மாயில் புறம்,சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் சக வேட்பாளர்களாக களமிறங்கிய வேட்பாளர்களின் வாக்குகளை தமது வாக்குகளாக அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு காட்டி ஒரு முக்கிய தவிசாளர் பதவியை பெற்றுள்ளீர்கள்.

நீங்கள் கூறுவது போன்று 16000 வாக்குகளை பெற்றது உண்மையாக இருந்தால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் மக்கள்  காங்கிரசின் சொந்த சின்னமான மயில் சின்னத்தில் களமிறங்கி 02 பிரதேச சபை ஆசனங்களை கைப்பற்றினால் எனது அரசியல் வாழ்வை முடித்துக்கொண்டு எதிர்வரும் எந்த தேர்தலிலும் களமிறங்கவோ அல்லது நேரடியாக/மறைமுகமாக எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டேன் என சவால் விடுக்கிறேன்.

அத்துடன் உங்களை எதிர்த்து எனது தலைமையிலான அணி சுயட்சையாக களமிறங்கினால் உங்களை விட 01 ஆசனம் அதிகமாக பெற்றுகாட்டுவேன் என சவால் விடுக்கிறேன்.எனது சவாலை நீங்கள் ஏற்று வெற்றிபெற்றால் நான் சொன்னதை அடுத்த வினாடியே செய்து காட்டுவேன். அதே போன்று நீங்கள் மண் கவ்வினால் ஒட்டு மொத்த அரசியலுக்கும் சலாம் சொல்லிவிட்டு வீட்டை சென்றடைய தயாரா என சவால் விடுக்கிறேன் என நபீர் பௌண்டசன் தவிசாளர் நிர்மாண முகாமைத்துவ முதுமாணி அல் -ஹாஜ் உதுமாங்கண்டு  நபீர் சவால் விடுத்துள்ளார்.

சஜா.எ.அனைஸ் 
சம்மாந்துறை 

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :